Header Ads



2 வருடங்களில் 2000 பொலிஸ், அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக முறைப்பாடு

பொலிஸ் சேவை­யி­லுள்ள 2000 த்துக்கும் அதி­க­மான பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு எதி­ராக 2016 முதல் 2017 வரை­யான காலப் பகு­தியில் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தாக தேசிய பொலிஸ் ஆணைக்­குழு தெரி­வித்­துள்­ளது.

முறைப்­பா­டு­களை முறை­யாக விசா­ரணை செய்­யாமை, முறைப்­பா­டு­களை விசா­ரணை செய்­யும்­போது ஒரு தரப்­புக்கு ஆத­ர­வாக நடந்து கொண்­டமை, பொலிஸ் தாக்­குதல் ஆகி­ய­னவும்  இம்­மு­றைப்­பா­டு­களில் அடங்­கி­யுள்­ளன என்ற அந்த ஆணைக்­கு­ழுவின் சிரேஷ்ட அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

இதற்கு மேலாக பொலிஸ் அதி­கா­ரி­களால், பொலிஸ் அதி­கா­ரி­க­ளுக்கு இழைக்­கப்­படும் அநீ­திகள் தொடர்­பா­கவும் முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ளன. 

இந்த முறைப்­பா­டு­களில் சுமார் 1000 முறைப்­பா­டுகள் தீர்த்து வைக்­கப்­பட்­டுள்­ளன என்றும் அவர் தெரி­வித்தார். 2016 ஆம் ஆண்டு மாத்திரம் 1879 பொலிஸாருக்கு எதிரான முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

No comments

Powered by Blogger.