Header Ads



15 சதவீதமானோருக்கு பிள்ளைப்பேறு இல்லை, அமைச்சரவைக்கும் வந்தது

கணவன் - மனைவியினரில் 15 சதவீதத்துக்கும் அதிகமான தொகையினர், பிள்ளைப்பேறு அற்ற நிலையில் உள்ளனர் என, இணங்காணப்பட்டுள்ளது என்று அமைச்சரவையின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.  

சுகாதார, போசணை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் தகவல்களை அடிப்படையாகக் கொண்டே, இது கணிக்கப்பட்டுள்ளது.  

இவற்றைக் கருத்தில் கொண்டு, பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பில் அறிவுறுத்தும் வேலைத்திட்டத்தை நாடளாவிய ரீதியில் முன்னெடுப்பதற்கு அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது.  

ஜனாதிபதி தலைமையில் செவ்வாய்க்கிழமை (22) கூடிய அமைச்சரவைக் கூட்டத்திலேயே, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்னவால் தாக்கல் செய்யப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்துக்கு அங்கிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.  

அதனடிப்படையில், பிள்ளைப்பேறு அற்ற தன்மை (மலட்டுத்தன்மை) தொடர்பான பிரச்சினைக்காக, பொதுமக்கள் மற்றும் சுகாதார சேவை அதிகாரிகளின் கவனத்தைச் செலுத்தி, இவ்வருடத்தில் தேசிய குடும்ப திட்டமிடல் தினத்தை செப்டம்பர் 26ஆம் திகதி ​அனுஷ்டிப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் அளித்துள்ளது. 

1 comment:

  1. இதுக்கும் முஸ்லிம்கள் காரணம் என்று சொன்னாலும் சொல்ல்வார்கள்

    ReplyDelete

Powered by Blogger.