Header Ads



முஸ்லிம் பாடசாலைகளுக்கு இன்றுமுதல் 11 ஆம் திகதிவரை விடுமுறை

முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை விடு­முறை இன்று 30 ஆம் திகதி முதல் செப்­டெம்பர் 11 வரை வழங்­கப்­பட்­டி­ருப்­ப­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது. 

நாட்­டி­லுள்ள அனைத்து முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்­கான இரண்டாம் தவணை விடு­முறை இன்று 30 ஆம் திகதி வழங்­கப்­பட்­டுள்­ளதால் முஸ்லிம் பாட­சா­லைகள் யாவும் இன்று மூடப்­பட்டு செப்டெம்பர் 11 ஆம் திகதி மீண்டும் மூன்றாம் தவ­ணைக்காக திறக்­கப்­படும் என கல்வி அமைச்சு அனைத்து முஸ்லிம் பாட­சா­லை­க­ளுக்கும் சுற்று நிருபம் மூலம் அறி­வித்­துள்­ளது.

கடந்த 18 ஆம் திகதி முஸ்லிம் பாட­சா­லைகள் யாவும் இரண்டாம் தவ­ணைக்­கென மூடப்­படும் என கல்வி அமைச்சு அறி­வித்த போதிலும் ஹஜ் ஜுப் பெரு­நாளை முன்­னிட்டு முஸ்லிம் சமயக் கலா­சார அமைச்சின் வேண்­டு­கோ­ளுக்­க­மைய 30 ஆம் திகதிக்கு அவ் விடு­முறை பிற்­போடப் ப­ட்டது.

No comments

Powered by Blogger.