Header Ads



சின்னய்யாவிடம் 1000 மில்லியன் நஷ்டஈடு கோரியுள்ள முன்னாள் தளபதிகள்

முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரால் வசந்த கரன்னாகொட மற்றும் ரியல் அட்மிரல் உதயகீர்த்தி விஜேபண்டார ஆகிய இருவரும், தமது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிடம் ஒருவர் 500 மில்லியன் ரூபா படி 1000 மில்லியன் ரூபா நட்டஈடு கோரியுள்ளனர். 

முன்னாள் கடற்படைத் தளபதிகளான அட்மிரால் வசந்த கரன்னாகொட மற்றும் ரியல் அட்மிரல் உதயகீர்த்தி விஜேபண்டார ஆகியோரின் சட்டத்தரணி ஊடாக நட்ட ஈடு கோரிய கடிதம் கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

தற்போதைய கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யா, கடந்த ஜூலை மாதம் அல்லது அண்மித்த காலத்தில், குற்ற புலனாய்வுப் பிரிவில் தம்மை பற்றி பொய்யான வாக்குமூலம் வழங்கியுள்ளதன் மூலம் தமக்கும் தமது குடும்பத்தினருக்கும் அவப்பெயர் ஏற்பட்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

திருகோணமலை கடற்படை முகாமில் இரண்டு அறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து அப்போதைய கடற்படைத் தளபதிகளான வசந்த கரன்னாகொட மற்றும் உதயகீர்த்தி விஜேபண்டார ஆகியோர் அறிந்திருந்ததாக, தற்போதைய கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யா பொய் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். 

இதன் காரணமாக தனது சேவையாளர்களின் நற்பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்திற்கு நட்ட ஈடாக ஒருவருக்கு 500 மில்லியன் ரூபா படி நட்ட ஈடு வழங்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யத் தவறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர்களின் சட்டத்தரணியூடாக கடற்படைத் தளபதி ட்ரவிஸ் சின்னய்யாவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.