Header Ads



1000 பேர் இஸ்லாத்தை ஏற்றனர்

மத்திய அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஹன்ஸ்ராஜ் அஹிர், தெலுங்கானா தலைநகர், ஐதராபாத்தில் நேற்று 19-08-2017 கூறியதாவது:

கேரளாவில், முதல்வர்பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, மலப்புரம் மாவட்டம், மத மாற்ற மையமாக திகழ்கிறது. ஒரு மாதத்தில், 1,000 பேர், மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

இந்துக்களும், கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களாக மத மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக, ஒரு அறிக்கை தெரிவிக்கிறது.சமீபத்தில், மலப்புரம் சென்றேன்; அப்போது, மாவட்ட உயரதிகாரி, தலைமை செயலர் ஆகியோருடன், மத மாற்ற விவகாரம் பற்றி பேசினேன். மலப்புரத்தில் நடக்கும் மத மாற்றம் குறித்த விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கும்படி, கேரள அரசுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டது.

தினமலர்
20-08-2017

அமீத்ஷாவின் உருட்டல் மிரட்டல், மோடியின் உறுமல், ஆர்எஸ்எஸ் குண்டர்களின் வெட்டு குத்து இத்தனையையும் மீறி 1000 பேர் மதம் மாறியிருக்கிறார்கள் என்றால் இந்து மதத்தில் 'சிஸ்டம் சரியில்லை' என்று பொருள். பிற்படுத்தப்பட்ட மக்கள் அனைவரையும் கீழாக நடத்துவதும் பார்பனர்களை ஏதோ தேவலோகத்தில் இருந்து வந்தவர்கள் போலவும் பில்டப் கொடுத்தால் சுய மரியாதை உள்ளவன் எப்படி இந்து மதத்தில் தொடர்வான்? 'நோய் முதல் நாடி' என்று வள்ளுவர் சொல்வது போல் உண்மை காரணம் என்ன என்று ஆராய்ந்து அதனை தீர்க்க முயல வேண்டும். அதை விடுத்து மோடியும் அமீத்ஷாவும் மாநில அரசுகளை உருட்டி மிரட்டுவதால் ஒரு பலனும் விளையப் பொவதில்லை. மாறாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரவே செய்வார்கள்.  

No comments

Powered by Blogger.