Header Ads



அனைவருக்கும் 10% மேலதிக டேட்டா (Data)

அனைத்து வகையான இணையப் பாவனையாளர்களுக்கும் இணைய சேவைக்காக மேலதிகமாக 10% இன்டர்நெட் பக்கேஜ்கள் (Data) வழங்கப்பட உள்ளதாக தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் அறிவித்துள்ளனர். 

இது தொடர்பாக இலங்கையில் அனுமதி பெற்ற தொலைத் தொடர்பு சேவை வழங்குனர்கள் ஒன்றிணைந்து வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, 

இன்டர்நெட் பக்கேஜ்கள்/அட்டைகளுக்கான தொலைத் தொடர்புகளுக்கான வரியானது குறைக்கப்பட்டமையினால் அனைத்து மொபைல் மற்றும் fixed line வாடிக்கையாளர்களுக்கு 10% போனஸ் Data வினை அனைத்து தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களும் நல்லெண்ணத்துடன் வழங்குவதற்கு 2017 ஆகஸ்ட் மாதம் 22ம் திகதி அன்று தீர்மானித்துள்ளார்கள். 

அரசாங்கத்தினால் இன்டர்நெட் பக்கேஜ்களுக்கான தொலைத்தொடர்பு வரியானது அகற்றப்பட்டமையானது டிஜிட்டல் ஸ்ரீலங்காவை உருவாக்குவதற்கான ஒரு பாரிய முன்னோக்கிய நகர்வாக அமையும் என தொலைத்தொடர்பு சேவை வழங்குனர்களால் ஒன்றினைந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொலைத் தொடர்புகளுக்கான வரியானது நீக்கப்பட்டமையுடன் போனஸ் சலுகையானது இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியினை பெற்றுள்ளதுடன் 2017 செப்டெம்பர் மாதம் 01ம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.