Header Ads



மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) அமைச்சரவை பச்சைக்கொடி


மஹரகம புற்றுநோய் வைத்தியசாலைக்கு பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இன்று -12- இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

MSH. மொஹமட் தலைமையிலான FightCancer Team அணியினர் மேற்கொண்ட துரித முயற்சியின் காரணமாக  சுமார் 250 மில்லியன் ரூபாய்களை பொது மக்களிடமிருந்து திரட்ட முடிந்தது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்களை பரிசோதிக்கத் தேவையான பெட் ஸ்கேன் இயந்திரத்தைக் கொள்வனவு செய்வதன் மூலம், அங்கு சிசிச்சை பெறும் நோயாளர்களின் நலன்கள அவதானிக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய சிகிச்சை கிடைப்பதுடன்,  நோயின் தன்மைக்கு ஏற்ப சிகிச்சையளிக்கவும், உயிர்களை காப்பாற்றவும் முடியுமெனவும் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.