Header Ads



IS தீவிரவாத அச்சுறுத்தலை, முறியடிக்க ஒத்துழைப்போம் - ஜம்­இய்யத்துல் உலமா

ARA.Fareel

ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்கத் தூத­ர­கத்தை தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தா­கவும் நாட்­டையும் நாட்டு மக்­க­ளையும் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து பாது­காக்­கும்­ப­டியும் அமெ­ரிக்கத் தூத­ரகம் அர­சாங்­கத்தை கோரி­யுள்­ளதாக அறிகின்றோம்.

எவ­ரா­வது ஒரு தனி­நபர் தீவி­ர­வா­தத்­துடன் தொடர்­பு­டை­ய­வ­ராக இருந்தால் அவர்­க­ளுக்கு எதி­ராக உரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­மாறு நாமும் அர­சாங்­கத்தை கோரு­கிறோம்.

எமது நாட்டை இவ்­வா­றான சமூ­கத்­துக்கு எதி­ரான தீய செயல்­க­ளி­லி­ருந்தும் பாது­காப்­ப­தற்கு அரச நிறு­வ­னங்­க­ளுக்கு எமது உத­வி­க­ளையும் ஒத்­தா­சை­க­ளையும் வழங்­கு­வ­தற்குத் தயா­ராக இருக்­கிறோம் என அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபை தெரி­வித்­துள்­ளது.

அகில இலங்கை ஜம்­இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செய­லாளர் அஷ்ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக் வெளி­யிட்­டுள்ள அறிக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் தொடர்ந்தும் தெரி­வித்­துள்­ள­தா­வது;

ஐ.எஸ். போன்ற இஸ்­லா­மிய போத­னை­க­ளுக்கு முர­ணாக செயற்­படும் தீவி­ர­வாத அமைப்­பு­க­ளோடு எவ­ரா­வது தொடர்­பு­பட்டால் நாம் அதனை மிகவும் வன்­மை­யாகக் கண்­டிக்­கிறோம். இவ்­வா­றான அமைப்­பு­க­ளுக்கும் இஸ்­லா­மிய அடிப்­படை விழு­மி­யங்­க­ளுக்கும் எவ்­வித தொடர்பும் கிடை­யாது என்­ப­தையும் உறு­தி­யாகக் குறிப்­பி­டு­கிறோம்.

இலங்கை முஸ்­லிம்கள் தீவி­ர­வா­தத்தை ஆத­ரிப்­ப­வர்­க­ளல்ல. உள்­நாட்டில் உரு­வான தீவி­ர­வா­தத்­துக்கும் முஸ்­லிம்கள் ஆத­ரவு வழங்­க­வில்லை. இஸ்லாம் மனித இனத்­திற்கு கருணை காட்டும் மார்க்­க­மாகும். அதன் அடிப்­படை போத­னை­க­ளாக சமா­தானம், அமைதி, பாது­காப்பு மற்றும் சகோ­த­ரத்­துவம் போன்­றன காணப்­ப­டு­கின்­றன. 

இஸ்லாம் ஒரு மனித உயி­ருக்கு எவ்­வ­ளவு முக்­கி­யத்­துவம் கொடுக்­கி­ற­தென்றால் ஒரு தனி மனி­த­னு­டைய கொலையை முழு சமூ­கத்­தி­னதும் கொலை­யாக கரு­து­கின்­றது. இஸ்லாம் போதிக்­கின்ற சமா­தானம், அமைதி, மற்றும் சகோ­த­ரத்­துவம் என்­பன சாதி, மத பேத­மின்றி அனைத்து மனி­தர்­க­ளுக்கும் பொது­வா­ன­வை­யாகும்.

இஸ்லாம் எமக்கு அனைத்து மனி­தர்­க­ளு­டனும் சமா­தா­ன­மா­கவும் நீத­மா­கவும் பொறு­மை­யா­கவும் நடந்து கொள்­ளு­மாறு ஏவு­கின்­றது. மேலும் அநி­யாயம் இழைத்தல், தீவி­ர­வாத செயற்­பா­டு­களில் ஈடு­படல் போன்­ற­வற்றை இஸ்லாம் மிக வன்­மை­யாக கண்­டிக்­கின்­றது. மேலும் குழப்பம் விளை­வித்தல், கடும் போக்­காக நடந்து கொள்­ளுதல், கொலை செய்தல் ஆகி­ய­வற்றை பெரும்­பா­வங்­க­ளா­கவும் குற்­றங்­க­ளா­கவும் இஸ்லாம் கருதுகின்றது.

எமது தாய் நாட்டிற்கு பாதிப்பு ஏற்படும் செயற்பாடுகளிலும் இலங்கை சமூகங்களுக்கு இடையிலான ஒற்றுமையை சீர்குலைக்கும் செயற்பாடுகளிலும் இந்நாட்டு முஸ்லிம் சமூகம் ஒருபோதும் ஈடுபடப் போவதில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.