Header Ads



IS இல் சேர்ந்தால், சொர்க்கத்திற்கு செல்லமாட்டீர்கள் - தப்பிவந்த பெண் தெரிவிப்பு

-BBC-

ஐஎஸ் அமைப்பில் இணையவேண்டும் என்ற ஆசையில் வருகிறவர்களுக்கு நரக வாழ்க்கைதான் காத்திருக்கிறது என இஸ்லாமிய பெண் ஒருவர் கூறியுள்ளார்.

துனிசியாவை சேர்ந்த எமான் என்பவர் தனது கணவன் மற்றும் குழந்தைகளுடன் ஐஎஸ் அமைப்பில் இணைவதற்காக சிரியாவில் உள்ள ரக்காவிற்கு சென்றுள்ளார்.

அங்கு நடப்பவை பற்றி அவர் கூறியதாவது, எனது கணவருக்கு போராளியாக வேண்டும் என்பது ஆசை, ஆனால் முறையான இஸ்லாமிய வாழ்க்கையை வாழ வேண்டும் எனது விருப்பமாக இருந்தது.

அல்லாவுக்காக மட்டுமே நாங்கள் அங்கு பயணித்தோம், ஆனால் அங்கு மக்கள் வேறுவிதமாக இருக்கிறார்கள், பெண்கள் ஒப்பனைகளை செய்து கொண்டு, முக்காடு போடமல் இருக்கிறார்கள்.

அது இஸ்லாமிய வாழ்க்கை இல்லை, ரக்காவுக்கு சென்றவுடன் எங்களது எதிர்பார்ப்பு பொய்த்துப்போனது. எனது கணவர் மற்றும் பிள்ளைகள் குறித்த அச்ச உணர்வுடனேயே நான் தூங்குவதற்கு செல்வேன்.

தீவிரவாதிகள் இரவில் வந்து எனது குழந்தைகள் மற்றும் கணவரை கடத்தி சென்றுவிடுவார்களோ என்ற சூழல் அங்கிருந்தது.

அதன்படியே எனது கணவர் கடத்தப்பட்டு சிறையில் அடைத்துவைக்கப்பட்டுள்ளார், ரக்காவில் பிறந்த எனது மகன் இஸ்லாமிய அரசு எனும் மாயையில் இருந்து விலகி, எங்காவது தூரமாக சென்று வாழ்வான் என நான் நம்புகிறேன்.

ஐஎஸ் அமைப்பில் சேர வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு நான் சொல்லும் அறிவுரை என்பது , இங்கு வராதீர்கள், இங்கு நீங்கள் இறந்தால் சொர்க்கத்திற்கு செல்லமாட்டீர்கள், அவர்கள் கொடுக்கும் எந்த வாக்குறுதியையும் அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள், இங்கு உங்களுக்கு நரகம் மட்டுமே காத்திருக்கிறது என கூறுகிறார்.

No comments

Powered by Blogger.