Header Ads



பிள்ளைகளை பாதுகாக்க, அப்பா விரைவில் வருவார்..!

ராஜபக்சவினரின் கடன் காரணமாகவே அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்ததாக அரசாங்கம் கூறுவது முற்றிலும் பொய் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று -31- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

துறைமுக அதிகார சபை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கான கடனை கடந்த 2016ஆம் ஆண்டு வரை செலுத்தியும் மிகப் பெரிய இலாபத்தை பெற்றது.

எதிர்காலத்திலும் எந்த சிரமமும் இன்றி கடனை செலுத்தும் அளவுக்கு வருமானம் இருக்கின்றது.

துறைமுகத்தை விற்பனை செய்து கிடைத்த பணத்தில் கடனை செலுத்த மாட்டார்கள் என்பதை நான் பொறுப்புடன் கூறுகிறேன். இந்த பணம் திறைசேரிக்கே செலுத்தப்படும்.

அரசாங்கத்தின் அமைச்சர்கள் சுகம் அனுபவிக்கவும் பயணங்கள் செல்ல பெற்றுக்கொண்ட கடனையே இந்த பணத்தின் மூலம் செலுத்தவுள்ளனர்.

இலங்கை தாய் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதி அப்பாவை கைவிட்டு சித்தப்பாவிடம் சென்றது.

அன்று அன்புடன் வளர்த்த அப்பாவின் பிள்ளைகளுக்கு சித்தப்பா வேறுபாடுகளை காட்டுகிறார். பிள்ளைகள் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் சேவகம் செய்ய போகின்றனர்.

பிள்ளைகளை பெற்றெடுத்த அப்பாவுக்கு துக்கம். அப்பா தாம் பெற்றெடுத்த பிள்ளைகளை பாதுகாக்க விரைவில் வருவார் என்பதை நாங்கள் நினைவூட்டுகிறோம்.

எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும் எமது அரசாங்கம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை மக்கள் மயப்படுத்தும். இதனை நாங்கள் கூறினால், துறைமுக நகரை கையகப்படுத்தியது போல் செய்யப் போகின்றீர்களா என சிலர் கேட்கின்றனர்.

சீனா எதிர்காலத்தில் வல்லரசாக மாற போகும் நாடு, கருங்கல்லில் தலையை மோதிக்கொள்ள வேண்டாம் என சிலர் ஆலோசனை வழங்குகின்றனர்.

எனினும் சரியான முறையில் கருங்கல்லில் தலையை மோதினால், தலையில் காயம் ஏற்படுவதற்கு பதிலாக கருங்கல் உடைந்து சிதறும் என்பது வரலாற்றில் உள்ளது எனவும் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.