Header Ads



நல்லாட்சியில் வியாபாரப் பொருளான, வஸீம் தாஜூதீன் - ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குற்றச்சாட்டு

அரசியல் வியாபாரப் பொருளாக  வஸீம் தாஜூதீனின் மரணத்தை நல்லாட்சி அரசு மற்றியுள்ளதாக முன்னாள்அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

குருநாகல் நிக்கவரட்டி பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டார். மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் ..

ரக்பி விளையாட்டு வீரர் தாஜூதீனின் மரணம் தொடர்பில் அப்போதோ எல்லாம் தெரிந்தது போன்று முன்னாள் ஜனாதிபதியின் மகனான யோசித்த ராஜபக்ஸவின் தலை மீது இந்த விடயத்தை போட்டிருந்தனர்.அதன் பின்னர்நாமல் என்றார்கள் பின்னர் ஷிதந்தி என்றார்கள்.இந்த ஆட்சி நிறுவப்பட்டு இரண்டரை வருடங்களுக்கும்மேலாகிறது. அது தொடர்பில் எந்தவிதமான உறுதி செய்யப்பட்ட ஆதாரங்களோ அல்லது தண்டனைவழங்குவதற்கான செயற்பாடுகளோ இடம்பெறவில்லை.

இருந்தாலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பலம் பெறும் சந்தர்ப்பங்களிலும் தேர்தல் பேச்சடிபடும் காலப்பகுதியிலும்  அதனை தூக்கி எடுத்து அவரை அடக்குவதற்கு முயற்சிக்கின்றனர். தாஜூதீன் ஒரு முஸ்லிம் என்பதால் அவரின் கொலையை வைத்து முஸ்லிம்களிடத்தில் முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஸவை வில்லனாக்கும் திட்டத்துடனும் இவ் ஆட்சியாளர்கள் செயற்படுவது இப்போது தெளிவாகியுள்ளது.

இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதியின் மகன் தொடர்ப்பு பட்டாரா என்பதற்கு அப்பால் அவரின் மரணத்தைவைத்து மிரட்டி அரசியல் செய்வது மிகவும் ஆபத்தானதும் கண்டிக்கத்தக்கதுமாகும்.அவரின் மரணத்தைநினைவுபடுத்தும் சந்தர்ப்பங்களில் எல்லாம் அவரது குடும்பத்தினர் மனங்கள் வெந்துவிடும். இதனைஇவ்வாட்சியால்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விடயத்தை செய்தவர்களை விட இதனை வைத்துஅரசியல் காய் நகர்த்துபவர்கள் மிகவும் கேவலமான சிந்தனையுள்ளவர்கள்.

தாஜூதீனின் பிரேதத்தை தோண்டி எடுத்தெல்லாம் விசாரணை செய்தார்கள். இருந்தும் இன்னும் அவர்களால் அதுதொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை.மீண்டும் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கும்மகனுக்கும்  சீ.ஐ.டியினர் அழைப்பு விடுத்துள்ளனர். இரண்டரை வருடங்கள் கடந்தும் இவர்களுக்கு இன்னும்விசாரணை செய்து முடியவில்லை.இதற்கு பிறகும் விசாரணை செய்கிறோம் என காட்டாமல் குறித்த உண்மைகுற்றவாளிகளை இவ்வாட்சியாளர்கள் கைது செய்ய வேண்டும்.

விசாரணை செய்ய சிறு விடயம் போதும். கைது செய்வதானால் முழுமையான ஆதாரங்கள் தேவை. அப்படியானஆதாரங்கள் இவர்களிடம் இல்லை. அதன் காரணமாக தாங்கள் பொய்யாக சோடித்த தாஜூதீனின் மரணவிசாரணை மேற்கொள்கிறோம் என்ற பெயரில் மக்கள் மனங்களில் நிலைக்கச் செய்கின்றனர். இதன் பிறகும்விசாரணைகளை மேற்கொள்வாதானதே அவர்கள் குற்றமற்றவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது.

இவ்வாட்சியாளர்கள் தாஜூதீனின் மரணத்தை வைத்து அரசியல் காய் நகர்த்துவதை நிறுத்த வேண்டும் என அவர்மேலும் குறிப்பிட்டார்.

1 comment:

  1. உண்மை... இந்த விஷயத்தை அரசியல் செய்கிறார்கள்... உண்மை ஒருபோதும் வெளிவராது... இது ஒரு கசப்பான உண்மை....

    ReplyDelete

Powered by Blogger.