July 26, 2017

சீனி கொள்கலனில் இருந்த கொக்கெய்னுடன், எந்த அரசியல்வாதிக்கும் தொடர்பில்லை - பாராளுமன்றத்தில் அறிவிப்பு

நாட்டுக்குள் போதைப்பொருட்கள் கடத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கீழ் தனியான பிரிவாக மறுசீரமைக்கப்படவுள்ளதாக சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். எதிர்வரும் வியாழக்கிழமை இது தொடர்பில் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியைப் பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

அதேநேரம், இரத்மலானையில் சீனி கொள்கலனில் கொக்கெய்ன் மீட்கப்பட்ட சம்பவத்துடன் அரசாங்கத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகளுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்பு இல்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

23/2 நிலையியற் கட்டளையின் கீழ் அநுரகுமார திசாநாயக்க எம்பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைத் தெரிவித்தார். இரத்மலானை சதொச களஞ்சியத்திலிருந்த சீனி கொள்கலனிலிருந்து 160 கிலோ கிராம் கொக்கெய்ன் மீட்கப்பட்டமை தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க கேள்விகளை முன்வைத்திருந்தார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சர் மேலும் கூறியதாவது: இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்து, பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்திடம் அறிக்கைகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த கொள்கலனை இறக்குமதி செய்த நிறுவனம், துறைமுகத்திலிருந்து வெளியே கொண்டுவருவதற்கு முகவராக செயற்பட்ட நிறுவனம் உள்ளிட்ட சகல தரப்பினரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொள்கலன் சாரதி மற்றும் உதவியாளர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர்.

அரச தரப்பில் தொடர்புகள் இருக்கின்றனவா என்ற கோணத்திலும் விசாரணைகள் நடைபெறுகின்றன. எனினும், அரசாங்கத் தரப்பில் உள்ள அரசியல் வாதிகளுக்கும், இச்சம்பவத்துக்கும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகள் இல்லையென்பது ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல்களைத் தடுப்பதற்கு இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையாலும் பாராட்டப்பட்டுள்ளது. பிராந்தியத்தில் குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டை இலங்கை சிறப்பாக முன்னெடுப்பதாக பாராட்டுக்கள் வந்துள்ளன.

இவ்வாறான நிலையில் போதைப்பொருட்கள் நாட்டுக்குள் கொண்டுவருவதைத் தடுப்பதற்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களைத் தடுக்கும் பணியகம் என்பவற்றை சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் கீழ் கொண்டுவந்து அவற்றை மறுசீரமைப்பதற்குத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான அனுமதியை எதிர்வரும் வியாழக்கிழமை சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவில் பெறவிருப்பதாகவும் அவர் கூறினார்.

5 கருத்துரைகள்:

என்றாலும், இது ஆரம்ப கட்ட விசாரணை தானே.

You should tell this to your Bbs boys

கடைசி கட்ட விசாரணையிலும் இப்படித்தான் தீர்ப்பு வரும்,நீங்கள் எதிர் பார்ப்பது நடக்காது.

Of course, you are right, that's because of our SL's politically corrupted legal system.

But.. we all (most of SL) knew the truth. That's most important.

கடைசிக்கட்ட விசாரணையில் மற்றுமோர் முஸ்லிம் அல்லாத சிறுபண்பை நபர் சம்பந்தப்பட்டதாக உறுதி செய்யப்படலாம் கவனம் மற்றைய சமுகம் மீது காழ்ப்புனர்ச்சியுடன் செயற்பட்டவர்கள் வெகுநாள் அதை தொடர்ந்ததில்லை அவர்கள் அழிவதுடன் அவர்களைச் சார்ந்தவர்களும் அழிவர் சதிச்செயல்கள் முதலில் வெற்றிபெறுவது போன்று தோன்றும் ஆனால் உண்மை வெல்லும் அதற்கு சிலகாலம் எடுக்கும் அதற்கு நமது நாடு மிகவும் சிறந்த உதாரணம் நமது நாடு நண்பா சில உதாரணம் தருகிறேன் முள்ளிவாய்க்காலில் பல்லின சமுகம் சிக்கியிருந்தால்; அப்பாவி உயிர்கள் பல காப்பாற்றப்பட்டிருக்கும் அத்துடன் இன்றும் போராட்டத்தலைமையும் இருந்திருக்கும் அல்லது வடகிழக்கு இணைந்திருந்திருந்து தமிழர் பொரும்பாண்மையாக ஆட்சிப்பீடம் ஏறியிருந்தபோது முஸ்லிம்களைக் கறுவறுக்காமல் இருந்திருதால் இன்றும் நாம் ஒன்றாக இருந்திருப்போம் வடகிழக்கும் தமிழ் பேசும் மக்களின் தேசமாக இருந்திருக்கும்

Post a Comment