Header Ads



முஸ்லிம் தலைவர்கள், மௌனிகளாக இருக்கின்றார்கள் - அதாவுல்லா

அரசியல் தலைவர்கள் மக்களுக்குச் சரியான வழியைக் காட்ட வேண்டும் என> தேசிய காங்கிரஸ் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தெரிவித்தார்

‘சமகால அரசியலும் முஸ்லிம் சமூகமும்’ எனும் தொனிப்பொருளில் மக்களைத் தெளிவுபடுத்தும் வகையிலான கலந்துரையாடல், மருதமுனையில் புதன்கிழமை (6)  இரவு நடைபெற்றபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் மேலும் தெரிவித்தபோது,

'கடந்த காலத்தில்; எமது அரசியல் தலைவர்களால்>  இளைஞர் சமூகம் பிழையாக வழி நடத்தப்பட்டிருக்கின்றார்கள். இதனால்> இன்று எமது அடுத்த கட்ட நகர்வு என்ன என்பதை அறியாமல் நடு வீதியில் நின்று கொண்டிருக்கின்றோம்” என்றார். 

'மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றிப் பேசுவதற்கு  ஒரு பலமான எதிர்க்கட்சி இந்த நாட்டில் இல்லை. ஆளும் கட்சி இல்லாவிட்டாலும்> பலமான எதிர்க்கட்சி தேவை. இதுவே ஜனநாயக தர்மமாகும்.

'முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் பற்றிப்  பேச முடியாமல் முஸ்லிம் தலைவர்கள் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது> மக்களை அரசியல் தலைவர்கள் பிழையாக வழி நடத்துகின்றார்கள். இந்த நிலையில்> இலங்கையில் வாழும் முஸ்லிம் சமூகத்துக்கு அரசியல் ரீதியாக சரியான வழிகாட்டலை வழங்க வேண்டியது எமது பொறுப்பாகும்.

'மேலும்> 16 வருடங்களுக்கு பின்னர், இப்போது முஸ்லிம் கூட்டமைப்புப் பற்றிப் பேசப்படுகின்றது. கூட்டமைப்பு இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால்> அதன் நோக்கம் மிகத் தெளிவானதாக இருக்க வேண்டும். மீண்டும் ஒருமுறை எமது சமூகத்தையும் இளைஞர்களையும் நடு வீதியில் கைவிட முடியாது” என்றார்.

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

No comments

Powered by Blogger.