Header Ads



ஜனாதிபதி ஆத்திரம், களத்தில் ரணில், ராஜித சமரசம், ராஜபக்ஸாக்கள் மீது பாய்கிறது வழக்குகள்..!

கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கான வழக்குகள் விரைவுபடுத்தப்படவுள்ளன.

இந்த நடவடிக்கைக்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இணக்கம் வெளியிட்டுள்ளாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாரிய நிதி மோடிகளை மேற்கொண்ட ராஜபக்ச குடும்ப உறுப்பினர்கள் தொடர்பில் ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் நிதி மோசடி விசாரணை பிரிவு இதுவரை எவ்வித வழக்குகளையும் தாக்கல் செய்யவில்லை என நேற்று அமைச்சரவை கூட்டத்தில் ஜனாதிபதி முன்வைத்த குற்றச்சாட்டை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு இணக்கம் வெளியிட்டுள்ளார்.

நேற்று கூட்டத்தில் ஜனாதிபதி கோபமாக கருத்து வெளியிட்டிருந்ததனை தொடந்து அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதி ஆகியோரை மேல் மாடிக்கு அழைத்து சென்று இருவரையும் சமாதானப்படுத்தியுள்ளார்.

அதற்கமைய இணக்கப்பாட்டிற்கு வந்த பிரதமர் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் முக்கிய 10 வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்க தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய நாமல் ராஜபக்சவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் மோசடி, மிக் விமான கொள்வனவு, போன்ற மோசடிகள் தொடர்பில் உடனடியாக வழக்கு தாக்கல் செய்வதற்கு ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.

மிக் விமான கொடுக்கல் வாங்கல் தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.