Header Ads



'இளஞ்செழியன் விவகாரம்' பிரதான சந்தேக நபர் பொலிஸில் சரண் - பின்னணி என்ன?

-பாறுக் ஷிஹான்-

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இன்று காலை 08.20 மணியளவில் குறித்த நபர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம் தொடர்ந்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு நீதிமன்றத்தில் சரணடைந்தவர் முன்னாள் போராளி என ஏற்கனவே அடையாளம் காணப்பட்டவர் என்றும் சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கடந்த சனிக்கிழமை மாலை நீதிபதி மா.இளஞ்செழியனை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கிப் பிரயோகத்தில் நீதிபதியின் மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் உயிரிழந்திருந்த நிலையில் மற்றையவர் தொடர்ந்தும் யாழை். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

2

யாழ். மாவட்ட நீதிபதி இளஞ்செழியனை இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் இன்று பொலிஸாரிடம் சரணடைந்திருந்தார்.

பொலிஸாரினால் தீவிரமான தேடப்பட்டு வந்த நிலையில், இன்று காலை பிரதான சந்தேகநபர் யாழ் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்திருந்தார்.

39 வயதான சிவராசா ஜயந்தன் என்ற பிரதான சந்தேகநபர் 1994ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பில் இணைந்துள்ளார். அதன் பின்னர் அந்த அமைப்பிலிருந்து விலகியிருந்தார்.

2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட சிவராசா ஜயந்தன், பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவ்வாறு பிணையிலுள்ள நிலையிலேயே அவர் இந்த துப்பாக்கி பிரயோக சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

1 comment:

  1. பின்னணி என்ன கடைசிவரை

    ReplyDelete

Powered by Blogger.