Header Ads



சைட்டத்திற்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் - முஸ்லிம்களும் பங்கேற்பு

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் மீதான அரசின் வன்முறையை கண்டித்தும் ,கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற அடிப்படை சேவைகளின் தனியார் மயப்படுத்தலை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் ஒன்று லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலகம் முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தை சைட்டத்திற்கு எதிரான பெற்றோர், மாணவர் இயக்கம் முன்னெடுத்துள்ளது.

இதன்போது தமிழ் , சிங்களம்  மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட கோஷங்களை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

 தமிழ் , முஸ்லிம் மற்றும் பல்லின மக்களும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டனர்.  “ கல்வியும் சுகாதாரமும் விற்பனைக்கு இல்லை” , “மாணவர்களை ஒடுக்கதே” , “அரசியல் கைதிகளை விடுதலை செய்” , “மாணவர்களை விடுதலை செய்” போன்ற சுலோக அட்டைகளை மூன்று மொழிகளிலும் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுவேளை, ஆர்ப்பாட்டத்திலீடுபட்டோர் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை கையளிக்க முற்பட்டபோது இலங்கை உயர்ஸதானிக்கர் அலுவலர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. இறுதியில் போராட்டக்காரர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய  மகஜரை அலுவலக வாயிலில் ஓட்டி சென்றமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.