Header Ads



கேள்வி கேட்க முடியாவிடின், அமைச்சராக பணியாற்றுவதில் பயனில்லை - தயாசிறி

இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையில் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ண  இறுதிப்போட்டி தொடர்பில் விசாரணை நடத்துமாறு முன்னாள் கிரிக்கட் தலைவர்  அர்ஜுண ரணதுங்க எழுத்து மூலம் என்னிடம்  கோரினால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளேன் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். 

தவறிழைப்பவர் யாரையும் தான் காப்பாற்ற தயார் இல்லை எனவும், 2009 ஆம் ஆண்டு லாகூரில் இடம்பெற்ற தாக்குதல் குறித்து விசாரணைகள் மேற்கொள்வதற்கு தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விளையாட்டு அமைச்சராக இருந்து கொண்டு இதை பற்றி கேள்வி கேட்ட முடியாவிடின் விளையாட்டு அமைச்சராக பணியாற்றுவதில் பயனில்லை என தெரிவித்தார்.

அமைச்சர்  அர்ஜுண ரணதுங்க முன்வைக்கும் ஒரு சில விடயங்களை நானும் ஏற்றுக்கொள்கின்றேன். அதுதொடர்பில் பேசுவதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது.  அதேபோன்று இந்த நாட்டு மக்களுக்கும்  விளையாட்டுத்துறை அமைச்சர் என்ற வகையில் எனக்கும் அந்த உரிமை இருக்கின்றது  என்றும் அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு  கருத்து  வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

No comments

Powered by Blogger.