July 26, 2017

தமிழர்களை, முஸ்லிம்களிடம் இருந்து மீட்க போராட்டம் - கருணா கொக்கரிப்பு

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­செல்­வதால் அதனை மீட்கும் போராட்­டத்தில் இணை­யு­மாறு முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்துவிட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும் என்றும் அவர் கூறி­யுள்ளார்.

நேற்­றைய தினம் அவர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,

நல்­லாட்சி என்று கூறிக்­கொண்டு பொய் ஆட்­சியும் அடா­வடி ஆட்­சியும் நடத்தும் இந்த அர­சாங்­கத்தின் அடா­வ­டித்­தனம் நாளுக்கு நாள் கூடிக்­கொண்டே போகின்­றது. இந்த ஒரு மாத காலப்­ப­கு­திக்குள் மூன்று சூட்டுச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­றுள்­ளன. வடக்­கிலே இரு­வரும், மட்­டக்­க­ளப்பில் ஆற்று மணல் ஏற்­றிய ஒரு இளை­ஞனும் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டுள்­ளனர். தமிழ்­மக்கள் வர­லாற்றில் ஒரு­க­றை­ப­டிந்த நாள் 1983 யூலை இன்­றைய தின­மாகும்.

அன்­றைய ஜே.ஆர்.ஜய­வர்­த­னவின் ஐக்­கிய தேசியக் கட்சி அர­சாங்கம் தமிழ் மக்கள் மீது இனப்­ப­டு­கொ­லையை நடத்தி மூவா­யிரம் அப்­பாவி தமிழ்­மக்­களை படு­கொலை செய்த நாள் இது­வாகும்.

தற்­போ­தைய ஐக்­கிய தேசியக் கட்­சியின் அர­சாங்­கமும் இதை மீண்டும் ஆரம்­பித்து விடுமோ என்ற அச்சம் வட­கி­ழக்கில் ஏற்­பட்­டுள்­ளது. நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீது மேற்­கொள்­ளப்­பட்ட கொலை முயற்சி பாரிய சந்­தே­கத்தை உரு­வாக்­கி­யுள்­ளது. அர­சுக்கு வக்­கா­லத்து வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு இதை கண்டும் காணாமல் இருந்து வரு­கின்­றது.

இன்­றைய நாள்தான் கடந்த 1983 ஆம் ஆண்டு பல இளை­ஞர்­களின் தலை­வி­தியை மாற்­றி­ய­மைத்த நாள். நானும் அதற்கு விதி விலக்­கல்ல. பல கற்­ப­னை­க­ளுடன் கல்­வியும் வீடும் என்­றி­ருந்த எங்­களை புத்­த­கங்­களை வீசி எறிந்து விட்டு அரச பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக ஆயுதம் ஏந்­தச்­செய்த நாள்.

அன்­றி­ருந்த இளை­ஞர்கள் இயக்க வேறு­பா­டின்றி தமிழ் மக்­க­ளுக்கு ஆயுதப் போராட்­டம்தான் விடிவைத் தரும் என்று நம்பிப் புறப்­பட்­டார்கள்.பின்பு பல இழப்­புக்கள், சூழ்ச்­சிகள், தலைமைப் போட்­டிகள், சகோ­தரப் படு­கொ­லைகள் என்­றெல்லாம் எமது போராட்டம் சிக்­குண்டு முள்­ளி­வாய்க்­கா­லுடன் முடி­விற்கு வந்து நிற்­கின்­றது.

வேட்டி கேட்­டுப்போய் கோவ­ணமும் இல்­லாமல் வந்த கதை­யா­கவே தமி­ழர்­களின் தலை விதி மாறி­யுள்­ளது.  இன்றும் போட்­டியும் பொறா­மையும் பிர­தேச வாதமும் தமிழ் தல­மை­க­ளிடம் மாற­வில்லை.

அதேபோல், கிழக்கில் முஸ்லிம் ஆதிக்கம் மேலோங்­கி­யி­ருக்­கி­றது. அத்­துடன், வடக்கில் தலைமைப் போட்­டிகள் என தமிழ் சமூகம் சிக்கித் தவிக்­கின்­றது.

இதிலிருந்து எமது சமூ­கத்தை விடு­விக்க வேண்­டு­மானால் பழ­மை­வாத சுய­நல அர­சி­யல்­வா­தி­களை தூக்கி எறிந்து விட்டு துணிச்சல் மிக்க புது­மை­யான அர­சியல் தல­மை­களை எமது இளைஞர் சமூகம் உரு­வாக்க வேண்டும்.

இன்னும் சம்­பந்தர், மாவை போன்ற சுய­நல அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பின்னால் சென்றால் எஞ்சி இருக்கும் எமது தமிழினத்தை நாம்  அக­ரா­தி­யில்தான் தேடிப் பார்க்க வேண்­டி­வரும்.

அவர்­களும் தீர்வை பெற்றுத் தருவோம் என்று கூறிக் கூறி இந்த காட்­டு­மி­ராண்டி அர­சுடன் துணை போய்க்­கொண்டு சுக­போ­கங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளார்கள். இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும்.

குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்து விட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும். இதற்­கான பாதையை நாம் வடி­வ­மைத்­துள்ளோம். தனி­யொரு மாற்று தமிழ் சக்­தி­யாக தனித்து போட்­டி­யி­ட­வுள்ளோம். இதில் வேறு­பா­டில்­லாமல் கிழக்கு வாழ் தமிழ் மக்களை எங்களின் பின்னால் அணிதிரளும்படி அன்பாக வேண்டிக்கோள்கின்றேன்.

இது வெறும் பதவிக்கோ புகழுக்கான போராட்டம் அல்ல தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் எங்கள் உறவுகளும் எங்களுக்கு முழு ஒத்துழைப்பையும் வழங்கும்படி பணிவாக வேண்டிக்கொள்கின்றேன் என்றார்.

ஏ.எச்.ஏ. ஹுஸைன் 

5 கருத்துரைகள்:

முதல்ல இவரிடம் இருந்து தமிழ் மக்களப்ப பாதுகாக்கனும் இவர் யுத்தத்திக்கு கடத்திச் சென்று கொன்ற இளைஞ்ஞர் யவதிகளுக்கு என்ன பதில் மாப்புள மகிந்தக்கு வக்கலாலத்து வாங்கி ப்ராடோவின போராரு அந்த குடும்பங்கள் படும் பாடு அந்த மக்களை அறிந்த நபர்களுக்கு தெரியும்

Karuna Amman (தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ர விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) தமி­ழர்­க­ளுக்கு அழைப்பு விடுத்­துள்ளார். will NOT be a force to reckon in the forthcoming Eastern Provincial Council elections. Karuna Amman’s TAMIL UNITED FREEDOM FRONT will only weaken the TNA vote base. It will have NO baring on the block Muslim votes, if the Muslims will “UNITEDLY” launch a campaign to gain the Muslim votes in the Eastern Province/Batticola. The Sinhala voters in the Eastern Province will rally round any anti Tamil groups. THIS IS WHERE THE MUSLIM ALLIANCE GROUP WILL BECOME A DECIDING FACTOR. It is time up that a NEW POLITICAL FORCE that will be honest and sincere that will produce "CLEAN" and diligent Muslim Politicians to stand up and defend the Muslim Community politically and otherwise, especially from among the YOUTH, has to emerge from within the Sri Lanka Muslim Community to face any new election in the coming future, Insha Allah. It is by only expressing and showing our political REPRESENTATIVE strength unitedly that we can gain our position as equals in the country. We can support any political party or idealogy, but emerging as a “NEW POLITICAL FORCE”, we will stand to gain what we are losing. We can even do this as an “Independent Group” too. Supporting the alliance of HASSANALI, BASHEER SEGU DAWOOD AND “THE KILAKKIN ELURCHI” MOVEMENT GROUPS CAN BE A REALITY. THE NEW POLITICAL FORCE OF THE MUSLIM YOUTH IN THE EAST HAS TO SUPPORT THE FORMATION OF THE “MUSLIM ALLIANCE”, INSHA ALLAH. WE MAY NOT AGREE WITH THE CHARACTERS BEHIND THIS ALLAINCE, BUT WE HAVE TO LOOK AT THE OBJECTIVE OF FORMING THIS MUSLIM ALLIANCE. IF THIS WILL BE A REALITY, SUPPORTERS OF "THE MUSLIM VOICE" IN THE EASTERN PROVINCE WILL BE SEEKING NOMINATION TO CONTEST UNDER THE MUSLIM ALLIANCE, Insha Allah.“THE MUSLIM VOICE” FULLY SUPPORTS THE FORMATION OF THIS MUSLIM ALLIANCE TO CONTEST THE PROVINCIAL COUNCIL ELECTIONS, ESPECIALLY THE EASTERN PROVINCIAL COUNCIL, Insha Allah.
Noor Nizam. Convener – “The Muslim Voice”.

முட்டாள் தனமாக பேசுறார் தமிழ் மக்களை பலிகொடுத்துவிட்டு
மேலும் முஸ்லிம்கள் தமிழ் மக்களை துரத்திவிட்டு ஈழம் கேக்கிறார்களா நீங்கள் வடக்கல் செய்தாப்போல அல்லது தமிழர்களின் காணியில் அத்துமீறி குடியேறுகிறார்களா

Attentoon seeking Karuna already in political dustbin playing jalra before his last breath .
Drumming race dubla for his survival.

இவன் UNPயை திட்டுவதை போல் திட்டி இவனைபோன்ற தமிழ் தீவிரவாதிகளின் பின்னால் மஹிந்த இருப்பதாக காட்டிக்கொண்டு மீண்டும் மஹிந்தவை முஸ்லிம்கள் ஒதுக்க ரணிலின் ஆசியுடனான கதாபாத்திரத்தை ஏற்று நடித்துகொண்டிருக்கின்றான்

Post a Comment