Header Ads



குப்பைகளிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டம் - கொழும்பில் ஆரம்பமாகிறது

கொழும்பு நகரில் இருந்து அகற்றப்படும் குப்பைகளை பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டமொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக, நகர அபிவிருத்திஅமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொழும்பில் கருத்து தெரிவித்த அவர், 

இவ்வாறான மூன்று திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவத்தார்.

இந்தத் திட்டம் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் கூறினார். 

கொழும்பு நகரில் நாளொன்றுக்கு 700 டன் குப்பை அகற்றப்படுவதாக தெரிவித்த அமைச்சர், அதில் 30 டன் குப்பை `இயற்கை கம்போஸ்ட்` உரம் தயாரிக்கும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருவதாக கூறினார்.

குப்பை பிரச்சினைக்கு தீர்வு காணும் அரசாங்கத்தின் திட்டங்களின் ஒரு பகுதியாக இந்த திட்டம் நடைமுறை படுத்தபடவுள்ளதாக கூறிய அமைச்சர், குப்பைகளை புத்தலத்திற்கு கொண்டு சென்று கொட்டும் திட்டம் அடுத்த செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கூறினார்.

No comments

Powered by Blogger.