July 02, 2017

எமது அழுத்தம், முஸ்லிம்கள் மீதான தாக்குதலை குறைத்தது - அமில தேர­ர்

சிங்­க­ளத்தில் : பிர­ஸன்ன சஞ்­சீவ தென்ன கோன் 
தமிழில் : ஏ.எல்.எம்.சத்தார் 

ஸ்ரீ ஜய­வர்த்­தனபுர பல்­க­லைக்­க­ழக  தொல் பொருள்­துறை  சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ளரும் சமூக நீதிக்­கான பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரி­யர்­களின் சம்­மே­ளன ஏற்­பாட்­டா­ள­ரு­மான தம்­பர அமில தேர­ருடன் லங்­கா­தீப வார இதழ் மேற்­கொண்ட நேர்­கா­ணலின் தமிழ் வடிவம். 

கேள்வி: முஸ்­லிம்­க­ளுக்கு விரோ­த­மான நாச­கார வேலை­க­ளுக்கு ஜன­வரி எட்டுக்கு முன்னர் அன்­றைய அரசின் ஆத­ரவு இருந்­த­தாக நீங்கள் சுட்­டிக்­காட்­டு­கி­றீர்கள். இன்று முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் அடா­வ­டித்­த­னங்­க­ளுக்கும் இன்­றைய அரசு உடந்­தை­யாக இருப்­ப­தாக நினைக்­கி­றீர்­களா?
பதில்: ஆம், இருக்­கி­றது. அத­னால்­தானே ஜன­வரி 8க்கு போகும்­படி நினை­வூட்­டு­கிறோம். ஜன­வரி 8 நிலைப்­பாடு நன்­றா­கத்­தானே இருந்­தது. அது இன­வா­தத்­திற்கு எதி­ரான நிலைப்­பா­டா­கத்­தானே இருந்­தது. ஆனால் இன­வாதம் மீண்டும் தலை­தூக்­கு­வ­தா­கவே உள்­ளது. சம்­பந்­தப்­பட்­ட­வரை கைது செய்­யும்­படி கூறினால் அவ்­வாறு கைது செய்­யாது இருக்­கையில் அது மேலும் வள­ரவே செய்யும். அரசு என்ற வகையில் இதனைத் தடுக்க வேண்டும் என்ற நிலைப்­பாட்­டிலே தான் நாம் இருக்­கிறோம். ஜன­வரி 8 இல் இன­வா­தத்­துக்கு எதி­ரான நிலைப்­பாட்டை முன்­வைத்தே இந்த அரசு பத­விக்கு வந்­தது. இந்த நிலைப்­பாட்டில் இருந்­தால்தான் இந்த அரசால் தொடர்ந்து நிலைத்­தி­ருக்க முடியும். இன ஐக்­கியம் என்­பது தொட­ரப்­பட வேண்­டி­ய­தொன்­றாகும். இந்த நிலைப்­பாட்­டி­லி­ருந்து தடம்­பு­ரண்டால் அது ஜன­வரி 8 இல் இருந்து கரணம் போட்ட மாதி­ரி­யா­கவே அமையும்.

கேள்வி: இப்­போது உங்­க­ளுக்கு அர­சினால் கிடைக்கப் பெற்­றுள்ள பிர­தி­ப­லன்கள் என்ன?
பதில்: ஊட­க­வி­ய­லா­ளர்­களைக் கூட்டி இத்­த­வ­றுகள் குறித்து நாம் கருத்து வெளி­யிட்டால் அதன் பின் அரசு கொஞ்சம் அசைந்து கொடுக்கும். இதுதான் தற்­போ­துள்ள நிலை.

கேள்வி: அது எப்­படி நடந்­தேற்­றப்­ப­டு­கி­றது?
பதில்: தொடர்ந்து கைதுகள் இடம்பெற்று வரு­கின்­றன. முஸ்லிம் பள்ளித் தாக்­கு­தல்­களும் குறைந்து விட்­டன. மக்கள் மத்­தியில் எமது கருத்­துக்­களும் ஏற்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் தெரி­கி­றது. ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும் தத்தம் நிலைப்­பா­டு­களை வெளி­யிட்டு வரு­கி­றார்கள். இவற்றின் மூலம் பாரி­ய­தொரு மாற்றம் நிகழ்ந்­துள்­ள­தாக உணர முடி­கி­றது.

கேள்வி: ஞான­சார தேரர் கைது செய்­யப்­பட வேண்டும் என்று நீங்கள் கரு­து­கி­றீர்­களா?
பதில்: ஞான­சார என்ற தனி நபர் குறித்­தல்ல. நான் பிரஸ்­தா­பிப்­பது. இதனை தனி நபர் ஒரு­வ­ராக வரை­ய­றுத்துக் கொள்ள வேண்டாம். ஞான­சா­ர­யா­னாலும் சரி, கர்­தினால் ஒரு­வ­ரா­னாலும் சரி, அல்­லது லெப்பை ஒரு­வ­ரா­னாலும் சரி, கோயில் பூசா­ரி­யாக இருந்­தாலும் சரி, பிர­தமர் அல்­லது அமைச்சர், ஊட­க­வி­ய­லாளர், பெண்­ணொ­ருவர் அல்­லது ஓர் ஆணாக இருந்­தாலும் சரி, வேறு எவ­ராக இருந்­தாலும் சரி இத்­த­கைய சந்­தர்ப்­பங்­களில் அவ்­வாறு  தனிப்­பட்ட ரீதியில் நோக்கக் கூடாது. நடு நிலையில் நின்றே நபர் ஒரு­வரை நோக்க வேண்டும்.

கேள்வி: நான் கேட்ட வினா…..?
பதில்: ஆம் நாட்டில் கொந்­த­ளிப்பு நிலை உரு­வாகும் பட்­சத்தில்…. விசே­ட­மாக இனம், மதத்தை மைய­மாக வைத்து யாரா­கிலும் நாட்டைப் பற்றி எரியச் செய்ய எத்­த­னிக்கும் பட்­சத்தில் அவரை சட்­டத்தின் பிடியில் சிக்கச் செய்ய வேண்டும். அதா­வது அந் நபரைக் கைது செய்து நீதி­மன்­றத்தில் ஆஜ­ராக்கி சட்­டத்தை செயல்­ப­டுத்த வேண்டும். 

கேள்வி: ஞான­சார தேர­ருக்கு அமுல்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்று தாங்கள் முன்­வைக்கும் சட்டம் முஸ்லிம் அல்­லது தமிழ் இனங்­களைச் சேர்ந்த இன­வாதம் பேசுவோர் மீதும் அமுல்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்­லையே.
பதில்: அப்­படி இல்லை. அண்­மைக்­கால வர­லாற்றில் முஸ்­லிம்­களோ அல்­லது தமி­ழர்­களோ பௌத்த விகா­ரை­களைத் தாக்­கிய சம்­பவம் எத­னையும் நாம் கண்­ட­தில்லை. அல்­லது பௌத்த வணக்கத் தலங்­களைத் தாக்­குங்கள் என்று கோஷங்கள் எழுப்­ப­டு­வ­தையும் எம்மால் கேட்க முடி­ய­வில்லை.  ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­புக்­களின் போதும் எடுத்துக் காட்­டி­யுள்ளோம். தமிழ்ப் பெயரில் உள்ள அமைப்­பு­களைத் தடை செய்ய வேண்டும் என்­ப­தையும் வலி­யு­றுத்தி வரு­கிறோம். அதா­வது அமைப்­புக்கள் எனும்­போது இனம், மதத்தின் பெயரால் குறிப்­பி­டப்­பட்­டுள்ள அர­சியல் அமைப்­புக்­களைத் தான் இவ்­வாறு தடை செய்­யக்­கோரி வரு­கிறோம். அர­சியல் யாப்பு மூலம் இவற்­றுக்குத் தடை கொண்டு வரப்­பட வேண்டும் என்­பதே எமது நிலைப்­பா­டாகும்.

கேள்வி: அப்­ப­டி­யாயின், ஜாதிக ஹெல உறு­மய, முஸ்லிம் காங்­கிரஸ்………. என்­றுள்ள அர­சியல் கட்­சிகள் தானே?
பதில்: கண்­டிப்­பாக ஜாதிக ஹெல உறு­மய, முஸ்லிம் காங்­கிரஸ் ஆகிய அரசியல் கட்­சிகள் தடை செய்­யப்­பட வேண்டும். தனி நப­ரன்றி பொது­வென்­பதன் அர்த்தம் இது­வாகும். தனி நபர்­க­ளான விக்­னேஸ்­வரன், ஹக்கீம், அதா­வுல்லாஹ், சம்­பிக்க என்­ப­தல்ல முக்­கியம். இன­வா­திகள், மத­வா­திகள் போன்­றோ­ருக்கு எதி­ராக கட்­டப்­படும் வேலி­யாக இதனைப் பார்க்க வேண்டும். அதுவும் நடு நிலை­யி­லி­ருந்தே நோக்க வேண்­டி­யதும் அவ­சியம்.

0 கருத்துரைகள்:

Post a Comment