Header Ads



'இஸ்லாமிய தீவிரவாதிகளை, உயிருடன் சாப்பிடுவேன்'

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாக பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி குரங்கு என விமர்ச்சனம் செய்தார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று ரோட்ரிகோ டுடெர்டி அவ்வப்போது சில சர்ச்சை ஏற்படுத்தும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், தீவிரவாதிகளுக்கு மிரட்டல் ஒன்றை விடுத்துள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் மத்தியில் பேசிய அவர், இஸ்லாமிய தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டுவிடுவேன் என்று கூறியுள்ளார்.

இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட மாலுமிகளில் இருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் ரோட்ரிகோ இந்த கருத்தினை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.