July 01, 2017

முஹம்மது அல்தாபி ராஜினாமா


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் மாநிலத் தலைவராக இருந்த ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார்.

இது குறித்து பரிசீலிக்க தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் உயர்நிலைக் குழு கூட்டம் கடந்த 29.06.2017 வியாழக் கிழமை கூடியது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பங்கேற்றார்கள்.

நடந்த இக்கூட்டத்தில் ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபியின் ராஜினாமாவை ஏற்பது என முடிவு செய்யப்பட்டது.

எனவே அடுத்த பொதுக்குழு கூடும் வரை மாநிலத் துணைத் தலைவராக உள்ள எம்.ஐ. சுலைமான் தலைவர் பொறுப்பை கவனிப்பார் என உயர்நிலைக்குழுவில் முடிவு செய்யப்பட்டது என்பதை அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இப்படிக்கு

மாநில நிர்வாகம்

0 கருத்துரைகள்:

Post a Comment