Header Ads



ஷரீஆ சட்டம், வங்­கி­முறை. காதி நீதி­மன்றை இல்லாதொழிக்க வேண்டும்

-ARA.Fareel-

அவ­சர, அவ­ச­ர­மாக எமது நாட்­டுக்கு புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்று தேவை­யில்லை. நாட்டின் நல்­லி­ணக்­கத்­தையும் தேசிய ஒரு­மைப்­பாட்­டி­னையும் ஏற்­ப­டுத்து­வ­தற்கு புதிய அர­சியல் அமைப்பு அவ­சியம் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. 

அப்­ப­டி­யாயின் எமது நாட்­டி­லி­ருந்து ஷரீஆ சட்டம், ஷரீஆ வங்­கி­முறை, காதி நீதி­மன்ற முறைமை, தேச வழமைச் சட்டம் என்­ப­வற்றை இல்­லா­தொ­ழித்து அனை­வ­ருக்கும் ஒரே சட்டம் அமுல் நடத்­தப்­ப­ட­வேண்டும் என சிங்­கள ராவய அமைப்பின் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் தெரி­வித்தார். 

ராஜ­கி­ரி­ய­வி­லுள்ள பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­ல­கத்தில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்­து­கை­யிலே அவர் இவ்­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில் தெரி­வித்­த­தா­வது 

‘இன்று நாட்டில் இன­ரீ­தி­யான சட்­டங்கள் அமுலில் உள்­ளன. இவை நீக்­கப்­ப­ட­வேண்டும். ஒருவர் ஒரு விவாகம் மாத்­திரம் செய்து கொள்­வ­தற்கு பொது­வான சட்டம் கொண்டு­வ­ரப்­ப­ட­வேண்டும். அர­சாங்கம் தயா­ரிக்கும் புதிய அர­சியல் யாப்பில் இன, மத ரீதி­யான சட்­டங்கள் நீக்­கப்­படும் என உறு­தி­ய­ளிக்­கப்­பட வேண்டும். 

ஜனா­தி­ப­தியின் நிறை­வேற்று அதி­கா­ரமும் குறைக்­கப்­ப­டக்­கூ­டாது. அவ­சர கால­நி­லை­மையில் ஜனா­தி­பதி தனது நிறை­வேற்று அதி­கா­ரத்தைப் பாவிக்கக் கூடி­ய­தாக இருக்க வேண்டும். கொழும்பை ஐ.எஸ். தீவி­ர­வா­திகள் தாக்­கு­வ­தற்கு திட்­ட­மிட்­டுள்­ள­தாக அமெ­ரிக்க உள­வுப்­பி­ரிவு அறி­வித்­துள்­ளது. இலங்­கை­யி­லுள்ள அமெ­ரிக்க தூத­ர­கத்­துக்கு பாது­காப்பும் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. எனவே எமது நாட்­டுக்கு ஐ.எஸ்.அச்­சு­றுத்தல் இல்லை என்று கூற முடி­யாது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு பற்றி நாம் பேசும் போது பிறக்­காத குழந்­தைக்கு நாம் பிறப்பு அத்­தாட்சிப் பத்­திரம் வழங்­கு­வ­தாக கூறு­கி­றார்கள். ஆனால் அர­சி­ய­ல­மைப்பு எனும் குழந்தை 10 மாதங்கள் வயிற்­றி­லி­ருந்து பிறந்து விட்­டது. தற்­போது பிள்ளை நடப்­ப­தற்கு உத­வி­வ­ரு­கி­றார்கள். புதிய அர­சி­ய­ல­மைப்­புக்­கான சட்­ட­மூலம் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பு சிங்­க­ள­வர்­க­ளுக்கும் பௌத்த மதத்­துக்கும் அபா­ய­மா­ன­தாக உள்­ளதால் அதனை நிறுத்­திக்­கொள்ள வேண்டும். 

மகா­நா­யக்க தேரர்­களின் ஆலோ­ச­னை­க­ளையும் பெற்றே புதிய அர­சியல் அமைப்பு உரு­வாக்­கப்­படும் என ஜனா­தி­பதி கூறி­னாலும் அர­சாங்­கத்­தி­லுள்­ள­வர்கள் மாறான கருத்­துக்­களைக் கொண்­டி­ருக்­கி­றார்கள். மகா­நா­யக்க தேரர்­களின் ஆலோ­ச­னைகள் தேவை­யில்லை. மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளார்கள் என்­கி­றார்கள். 

மகா­நா­யக்க தேரர்­களின் நிலைப்­பாட்­டினை எவ­ருக்கும் சவா­லுக்­குட்­ப­டுத்த முடி­யாது. நாட்டின் பெரும்­பான்மை மக்கள் மகா­நா­யக்க தேரர்­களின் கருத்­தையே ஆத­ரிக்­கி­றார்கள். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு புதிய அர­சி­ய­ல­மைப்பு விவ­காரம் தொடர்பில் மகா­நா­யக்க தேரர்­க­ளுடன் கலந்­து­ரை­யா­ட­வேண்டும் எனத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள். தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பேசலாம். ஆனால் தேச வழமை சட்­டத்தை இல்­லாமற் செய்­வ­தற்கு அவர்கள் உடன்­ப­ட­வேண்டும். 

மகா­நா­யக்க தேரரின் கருத்­துக்­களை நிரா­க­ரிக்கும் அரச சார்­பற்ற நிறு­வ­னங்கள், புர­வெ­சி­ப­லய, தம்­ப­ர­அ­மில தேரர் என்­போரை சிங்­கள மக்கள் நிரா­க­ரிக்க வேண்டும்.

மகா­நா­யக்க தேரர்­களின் கருத்­து­களை நிரா­க­ரிக்கும் தம்­பர அமில தேரர் போன்­ற­வர்­களை நிக்­கா­யா­வி­லி­ருந்து நீக்கி விடும்­படி மகா­நா­யக்க தேரர்­களைக் கோரு­கிறோம். அஸ்கிரிய பீடமும், நிர்வாகமும் ஜனாதிபதியிடம் அறிக்கையொன்றினைச் சமர்ப்பித்துள்ளது. சில தீர்மானங்களை எடுத்து அவற்றை நிறைவேற்றும்படி கூறியுள்ளது.

எனவே புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் ஜனாதிபதி மீள் பரிசீலனை செய்ய வேண்டும். பௌத்த பீடங்களை எதிர்த்து அரசாங்கத்தினால் எந்த தீர்மானங்களையும் நிறைவேற்ற முடியாது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம் என்றார்.

No comments

Powered by Blogger.