Header Ads



அமெரிக்க முஸ்லிம்களில் பாதிப்பேர், பாகுபாடுகளை சந்தித்திருப்பதாக ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களில் கிட்டத்தட்ட பாதி அளவானோர் கடந்த ஆண்டில் பாகுபாடுகளை சந்தித்திருப்பதாக பியு ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.

இதில் முக்கால் பங்கினர் முஸ்லிம்களுக்கு எதிராக பெரும் பாகுபாடுகள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருப்பதோடு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தம்மீது நியாயமற்று நடப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

2011 ஆம் ஆண்டு இடம்பெற்ற கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி பராக் ஒபாமா தம்மீது நட்புடன் நடப்பதாக 64 வீதமான அமெரிக்க முஸ்லிம்கள் குறிப்பிட்டிருந்தனர்.

அமெரிக்க முஸ்லிம்கள் அதிக மிதவாதம் கொண்டவர்களாக மாறி வருவதாக இந்த ஆய்வு கணித்துள்ளது.

இதன்போது 1,001 அமெரிக்க முஸ்லிகளுடன் தொலைபேசி ஊடே ஆய்வாளர்கள் உரையாடியுள்ளனர். பிரதிநிதிகளின் மாதிரி அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அண்மைய ஆண்டுகளில் அமெரிக்காவில் ஒரு முஸ்லிமாக இருப்பது கடினமாக இருப்பதாக இவர்களில் பாதி அளவானவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த ஆண்டி தனிப்பட்ட முறையில் பாகுபாட்டை சந்தித்ததாக 48 வீதத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.