Header Ads



பெற்றோலிய போராட்டம் நிறுத்தம் – விலகியது இராணுவம்

மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்று மாலை நடத்தப்பட்ட பேச்சுக்களை அடுத்து  பெற்றோலிய ஊழியர் தொழிற்சங்கங்கள், தமது போராட்டத்தை வரும் ஓகஸ்ட் 01ஆம் நாள் வரை இடைநிறுத்தியுள்ளன.

அத்துடன்,  மேலதிக பேச்சுக்கள் நடைபெறும் வரையில், எரிபொருள் விநியோகப் பணிகளை தொடர்ந்து முன்னெடுக்கவும் தொழிற்சங்கங்கள் இணங்கியிருக்கின்றன.

மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முன்தினம் பெற்றோலிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததை அடுத்து நாடெங்கும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் விமான சேவை மற்றும் மின்விநியோகங்கள் தடைப்படும் ஆபத்தும் தோன்றியது.

இந்த நிலையில், நேற்றுமுன்தினம் நள்ளிரவில், பெற்றோலிய விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனம் செய்த சிறிலங்கா அதிபர், சிறிலங்கா இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரை, எரிபொருள் விநியோகத்தை சீர்படுத்துமாறு உத்தரவிட்டார்.

No comments

Powered by Blogger.