July 05, 2017

இலங்கையில் முதலிட, சவூதி இளவரசர் விருப்பம்

சவுதி அரேபிய இளவரசர் அல்வலீட் பின்  தலால் அப்துல் அஸீஸ் அல் சௌத்நேற்று (04) முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சந்தித்தார்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் தனது பாராட்டுக்களைத் தெரிவித்த இளவரசர் அப்துல் அஸீஸ் அல் சௌத் இலங்கையின் வர்த்தக, சுற்றுலா துறைகளிலுள்ள முதலீட்டு வாய்ப்புக்கள் தொடர்பில் முன்னுரிமை கொடுத்து கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.

சர்வதேச ரீதியில் உயர்ந்தளவு முதலீட்டை மேற்கொள்ளும் சவுதி முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களை எதிர்காலத்தில் இலங்கையின் முதலீட்டு வாய்ப்புகளில் கவனம் செலுத்த எதிர்பார்ப்பதாக தெரிவித்த சவுதி இளவரசர் அந்த முதலீட்டு வாய்ப்புகள் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்காக வர்த்த சமூகத்தவர்களுடன் தமது நாட்டுக்கு வருகை தருமாறும் ஜனாதிபதி அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

இலங்கையின் மனங்கவரும் காலநிலை, பசுமை சுற்றாடல், வனப்பான கடற்கரைகள், வரலாற்று தளங்கள் போன்றவை சுற்றுலாத்துறையின் ஈர்ப்பை வென்றுள்ளதுடன், இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு அதிக வாய்ப்புக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

சவுதி அரேபியா தொன்றுதொட்டே இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்காக வழங்கும் ஒத்துழைப்பை பாராட்டிய ஜனாதிபதி அவர்கள் அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கிய உதவியையும் பாராட்டினார்.

0 கருத்துரைகள்:

Post a Comment