Header Ads



"சிங்கள காழ்ப்புணர்வை, வசதியாக பாவிக்கும் தமிழர் தரப்பு"

பொது­ப­ல­சே­னாவின்  நிறை­வேற்றுப் பணிப்­பாளர் கலா­நிதி  டிலந்த  விதா­னகே வழ­மைபோல் அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  மீது ஒரு புதிய குற்­றச்­சாட்டை சுமத்­தி­யி­ருக்­கிறார். அதா­வது ச.தொ.ச. வுக்கு சீனி இறக்­கப்­பட்ட கொள்­க­லனிலிருந்து 320 கோடி ரூபா பெறு­ம­தி­யான கொக்கைன் அதி­கா­ரி­களால் மீட்­கப்­பட்­டுள்­ளமை பார­தூ­ர­மான  விடயம்.  இக்­க­டத்­தலின் பின்­ன­ணியில் அர­சியல் இருப்­பதால் இந்­நி­று­வ­னத்தின் பொறுப்­பா­ள­ரான   அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை ஜனா­தி­பதி பதவி விலக்கி விட்டு நியா­ய­மான விசா­ரணை நடாத்த வேண்டும் எனக் கூறி­யுள்ளார்.

இவ்­வி­ட­ய­மாக இரத்­ம­லானை பொரு­ளா­தார மத்­திய நிலை­யத்­தி­லுள்ள ச.தொ.ச. களஞ்­சி­ய­சா­லைக்கு சீனி கொண்­டு­வ­ரப்­பட்­டது பற்றி கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்சின்  ஊடகப் பிரிவு பின்­வ­ரு­மாறு விளக்­க­ம­ளித்­தது. இது முற்­றிலும் பொய்­யாகும். அமைச்­ச­ருக்கும்  இதற்கும் தொடர்பு இல்லை. அமைச்சர் மீது அர­சியல் ரீதி­யான காழ்ப்­பு­ணர்வு கொண்­ட­வர்­களும் ஒரு சில அர­சியல் கட்­சி­க­ளுமே இதில் அமைச்­சரை தொடர்­பு­ப­டுத்­து­கின்­றனர். 

ச.தொ.ச.சீனி இறக்­கு­மதி தனியார் நிறு­வ­னங்­க­ளுக்கு வாரா­வாரம் டென்டர் மூலம்  வழங்­கப்­ப­டு­கி­றது. குறித்த வாரத்­துக்­கு­ரிய டென்டர் ரஞ்­சிதா பிளஸ் எனும் நிறு­வ­னத்­துக்கே  வழங்­கப்­பட்­டி­ருந்­தது. வில்­பத்­துவில் நிகழும் முஸ்லிம் குடி­யேற்­றங்­களை எதிர்க்கும் இன­வாத தேரர்­களே தொடர்ந்து அமைச்சர் மீதும்  அவ­ரது செயற்­பா­டு­களின் மீதும் பல குற்­றச்­சாட்­டு­களை சுமத்தி போதைப் பொருளில் சம்­பந்­தப்­ப­டுத்­தி­னார்கள். காரணம், அமைச்­சரைப் பழி­வாங்க வேண்டும் எனும் நோக்­க­மே­யாகும் எனக் கூறலாம். இதில் அமைச்­சரின் சகோ­த­ர­ரையும் உட்­ப­டுத்­தி­னார்கள். கலா­நிதி டிலந்த விதா­னகே தனது பழி­யு­ணர்வு கார­ண­மா­கவே புத்­தியைப் பறி­கொ­டுத்­தி­ருக்­கிறார். டென்டர் பெற்­ற­வரின் செய­லுக்கு பெற்­ற­வரே பொறுப்பு. அமைச்சர் பொறுப்­பல்ல. தண்­டிப்­பது மட்­டுமே அமைச்­சரின் பொறுப்பு. இதை அந்த கலா­நி­தியால் விளங்கிக் கொள்ள முடி­ய­வில்­லை. 

இந்த கலா­நிதி மட்டும்தான் பல ஆண்­டு­க­ளாக அர­சிடம் போதைப் பொருள் பற்றி அச்­சு­றுத்தி வரு­கி­றாராம். இவர் மட்­டு­மல்ல,  இன்னும் பலரும்  கூட பல ஆண்­டு­க­ளாக எச்­ச­ரிக்­காமல் இல்லை. போதைப் பொருள் விற்­ப­னை­யிலும் பாவ­னை­யிலும் ஜாதி, மதமே  இல்லை. இவரோ முஸ்­லிம்கள்  மீது மட்­டுமே  பழி­போட்டு வந்­தி­ருக்­கிறார். 

எப்­போது  ஜே.ஆரின்  திறந்த பொரு­ளா­தாரக்  கொள்கை வந்ததோ  அப்­போதே  போதைப் பொருள்,  ஆயுதப் பாவனை, சூது,  களி­யாட்டம்  ஆகி­யவை  பெரு­கி­விட்­டன. விகி­தா­சார  ரீதியில் பார்த்தால் இலங்­கையில்  போதைப் பொருளுக்கும்  ஆயுத பாவ­னைக்கும்  சூதுக்கும்  களி­யாட்­டத்­துக்கும் பலி­யானோர்  முஸ்­லிம்­களில்  சொற்­ப­மா­னோரே எனலாம். எனவே, போதைப்பொருள் விற்­ப­னை­யிலும் பாவ­னை­யிலும் முஸ்­லிம்­களை மட்­டுமே அடை­யா­ளப்­ப­டுத்­து­வது இன, மத, வெறி­யாகும். அமைச்­சரின்  கைத்­தொழில் வர்த்­தக அமைச்சே டிலந்த விதா­ன­கேயின் கண்ணைக் குத்­து­கி­றது என்­பதில் எள்ள­ளவும் சந்­தே­க­மில்லை. 

அத­னால்தான் அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனை விசா­ரிக்­கு­மாறும் அவரைப் பத­வி­யி­லி­ருந்து விலக்­கி­வி­டு­மாறும் ச.தொ.ச.வுக்கு பொறுப்­பாக அவர்  இருக்கும் வரை நியா­ய­மான விசா­ரணை நிக­ழாது  எனவும் கலா­நிதி டிலாந்த விதா­னகே கூறு­கிறார். 

தன்­மீதும் வில்­பத்து முஸ்­லிம்­களின் குடி­யி­ருப்பு மீதும்  பொது­ப­ல­சேனா கொண்­டி­ருக்கும் காழ்ப்புணர்வு கார­ண­மா­கவே பொது­வாக முஸ்­லிம்கள் மீது வைராக்­கியம் செலுத்தும் பொது­ப­ல­சேனா இப்­படிக் கூறு­கி­றது என அமைச்சர் கூறு­கிறார். இதை நிரூ­பிப்­பதைப் போலவே டிலந்த விதா­ன­கேயின் அறிக்­கையும்  காணப்­ப­டு­கி­றது. சிலா­பத்­துறை, மன்னார் ஆகிய பகு­தி­க­ளுக்கும் கடல் மார்க்­க­மாக போதைப் பொருள் கடத்தி வரப்­ப­டு­கி­றது. அதைத் தடுக்­கவே வில்­பத்து முஸ்லிம் குடி­யேற்­றங்­களை எதிர்க்­கிறோம். அங்­குள்ள குடி­யேற்­றங்கள் இதற்கு சாத­க­மாக அமையும். அங்­குள்ள வனப்­பி­ர­தேசம் அழிக்­கப்­ப­டு­வது  நிறுத்­தப்­ப­ட­வேண்டும். நாம் இவ்­வாறு அழுத்தம் கொடுத்தோம். வில்­பத்து முஸ்லிம்  குடி­யேற்­றத்தின் மூலம் பாது­காப்பு தொடர்­பாக நாட்­டுக்கு சவால் ஏற்­ப­டு­வ­தோடு ஆயு­தக்­க­டத்­தலும் நிக­ழலாம் என்றோம் என டிலாந்த விதா­னகே  குறிப்­பி­டு­கிறார். சிலர் கூறு­வதைப் போல்  பிரே­ஸி­லி­ருந்து சீனி இறக்­கு­ம­தியைத் தடுக்கக் கூடாது. 

போதை வஸ்­தையே தடுக்க வேண்டும் என இவர்  கூறு­கி­றாரே? அர்த்தம் என்ன? அமைச்சர் ரிஷாத்  பதி­யு­தீனை அகற்ற வேண்டும் என்­ப­தற்­காக சிலர் திட்­ட­மிட்டு சில அதி­கா­ரிகள் மூலம் பிரே­ஸி­லி­ருந்து    இலங்­கைக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்ட சீனி­யோடு கொக்­கைய்னும் ஏற்­று­மதி  செய்­யப்­பட்­டி­ருந்­ததா?  இதன்­மூலம் இனி பிரே­ஸி­லி­லி­ருந்து சீனி இறக்­கு­ம­தி­யா­வது தடுக்­கப்­படும் என டிலாந்த  விதா­னகே கரு­து­கி­றாரா?  இதற்கு ஒத்­து­ழைத்த பிரேஸில் அதி­கா­ரிகள் பாதிக்­கப்­ப­டு­வார்கள் எனவும்  நினைக்­கி­றாரா? 

இந்த சந்­தர்ப்­பத்தை சில தமிழ்த்­த­ரப்­பி­னரும் வச­தி­யாகப் பாவித்துக் கொள்­கி­றார்கள். அதா­வது  டிலாந்த விதா­ன­கேயின்  பேரி­ன­வா­தத்­துக்கு  உர­மூட்­டு­கி­றார்கள். அமைச்சர் ரிஷாத் பதி­யு­தீனின் முஸ்லிம் குடி­யேற்ற செயற்­பாடே அவர்­களின் கோபத்­துக்குக் கார­ண­மாகும். 1991 ஆம் ஆண்டு 24 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் வடக்­கி­லி­ருந்து  விரட்­டப்­பட்ட முஸ்­லிம்கள் 28 வரு­டங்­க­ளா­கியும் இன்னும் முழு­தாகக் குடி­யேற்­றப்­ப­ட­வில்லை. நஷ்டஈடுகளும் இல்லை உயிரிழப்புகளுக்குப் பொறுப்பு கூறுவோரும் இல்லை. இந்நிலையில் தற்போது அரசு செய்ய வேண்டிய கடமையைத் தான் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் செய்து வருகிறார். 

யுத்த சூழலில் தமிழ் மக்களோடு முஸ்லிம்கள் தான் இழப்புகளை சந்தித்திருக்கிறார்கள். முஸ்லிம்களுக்கு நிவாரணம் தேவையில்லையா? தமிழ் மக்கள் தமது உரிமைகளை உரத்துப் பேசும்  நிலையில் முஸ்லிம்கள் வாளாவிருப்பது எப்படி? வில்பத்து முஸ்லிம்களின்  பூர்வீகமும் வாழ்விடங்களும் வாழ்வாதாரங்களும் காக்கப்பட வேண்டும். இது மனித உரிமையாகும்.

-A.J.M.NILAAM-

3 comments:

  1. எந்த இனவாதி கொக்கரித்தாலும் அல்லாhவின் நாட்டம் இன்றி ஒன்றையும் உசுப்ப முடியாது முஸ்லிம் சமுகம் உங்களுடன் இருக்கின்றது

    ReplyDelete
  2. Change your title Jaffna muslim, Don't use the name of Tamil which is unnecessary for tgis article.
    Why don't you worry about the christians killing in Stria and Middle east

    ReplyDelete
  3. இந்த டமில் தரப்பை நம்பி தான் வடகிழக்கு இணையவேண்டுமாம்

    ReplyDelete

Powered by Blogger.