Header Ads



வடமாகாண முஸ்லிம்களின், வரலாறு சம்பந்தமான கண்காட்சி

இலங்கை முஸ்லிம்கள் மற்றும் யாழ்ப்பாண, முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மாவட்ட  முஸ்லிம்களின் வரலாறு சமூகவியல், கலாச்சாரங்கள் சம்பந்தமான கண்காட்சி  ஒன்று இன்ஷா அல்லாஹ்  விரைவில் இடம்பெறவுள்ளது. 

இந்தக் கண்காட்சி இலங்கை முஸ்லிம்களின் இலங்கைப் பிரவேசம், இஸ்லாத்தின் பரம்பல், மாவட்ட ரீதியிலான பரம்பல்கள்,  சனத்தொகை ஒப்பீடுகள், இலங்கை முஸ்லிம்களின் மற்றும் யாழ்ப்பாண முஸ்லிம்களின் கல்விச் சாதனைகள், விளையாட்டுச் சாதனைகள், இலக்கியவாதிகளின் விபரங்கள்,  வரலாறுகள்,  வடக்கு  முஸ்லிம்களினதும் யாழ் முஸ்லிம்களினதும் வெளியேற்றம் சம்பந்தமான கருத்தோவியங்கள், போட்டோக்கள் , வெளியேற்றத்தினால் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள், சொத்தழிவு சம்பந்தப் பட்ட படங்களின் தொகுப்பு, குருங் கவிதைகள், அகதிவாழ்க்கை  , மீள்குடியேற்றம், மீள்குடியேற்றச் சவால்கள், சுயதொழில் சிந்தனைகள், கல்விச் சிந்தனைகள், மார்க்க விழுமியங்கள், ஒழுக்க சிந்தனைகள், கருத்தாளமிக்க குர் ஆன் ஆயத்துக்களின் கருத்துப் பதிவுகள், ஹதீஸ்கள், ஸஹாபாக்களின் வரலாற்று படிப்பினைகள், கலிகிராபி எனும் அரபு எழுத்தணிக் கலை ஆக்கங்கள், வரலாற்றுச் சின்னங்கள், முஸ்லிம்கள் சம்பந்தமான ஆதிமனிதன் தொடர்பான தொல்பொருள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் புகைப் படங்கள் மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பம், அரசியல், புவியியல், கைத்தொழில் சிந்தனிகள் போன்றன  இந்தக் கண்காட்சியில்  உள்ளடக்கப்படும். 

இப்போட்டி 12 வயதுக்கு குறைந்த வயதினர் பிரிவு, 13 முதல் 16 வயதுப் பிரிவு, 17 முதல் 19 வயதுப் பிரிவு என்ற வகையில்  மாணவர்கள் மட்டத்திலும், பல்கலைக்கழக மானவர்கள், ஏனையதுறை மாணவர்கள்,  பெண்கள்,  உலமாக்கள், தொழி செய்வோர், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள், ஓய்வுபெற்றவர்கள்  என பல்வேறு பல்வேறு பிரிவினரின் ஆக்கங்களையும் உள்ளடக்கும் விதமாக திட்டமிடப் பட்டுள்ளது. 

ஒவ்வொரு போட்டோவும் ஏ 4 அளவில் இருப்பது நல்லது. சிறந்த கலர் பிரின்டுகளும் ஏற்றுக் கொள்ளப் படும்.   போட்டோக்களாயின் முடிந்த வரை ஆக்கங்களை உருவாக்குவோர் பெயரை போட்டொவிலேயே வரும் படி செய்து லெமினேட் செய்து எடுப்பது நல்லது.  இதற்கு கிறபிக் டிசைனர் அல்லது போட்டோ ஸ்டூடியோவின் உதவி தேவைப் படலாம். பெரிய ஆக்கங்கள் 2X2 அடி அளவு அல்லது 2.5 X 3 அடி அளவுள்ள பிரிசில் போட் அல்லது கார்ட்போட்டில் தயாரிக்கப் பட வேண்டும். ஒவ்வொரு ஆக்கத்திலும் தயாரிப்பவரின் பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம் என்பன குறிப்பிடுவது  அவசியம். 

சிறந்த ஆக்கங்கள் எதிர்காலத்தில் இன்ஷா அல்லாஹ் அமைக்கப் படவுள்ள நிரந்தர நூதனசாலையில் காட்சிப் படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப் படும்.  ஆக்கங்கள் பின்வருவோரிடம் நேரடியாகவோ அல்லது தபாலிலோ அனுப்ப முடியும். 

யாழ்ப்பாணத்தில் :
ஆர்.கே,சுவர்க்ககான்n153/25, கலீபா அப்துல் காதர் லேன் யாழ்ப்பாணம்தொலைபேசி: 0770476555

ஐ.எஸ். நிராஸ்  332, முஸ்லிம் கல்லூரி வீதி யாழ்ப்பாணம் தொலைபேசி: 0777067366

புத்தளத்தில்:
ஏ.கே. முஹம்மத் தையூப் 94/10, முதலாம் குறுக்கு வீதி சதாமியாபுரம்  புத்தளம் தொலைபேசி:0719109638

ஏ.எம். அப்துல் மலீக் மௌலவி 122/7, ஏழாம் குறுக்குத் தெரு சதாமியாபுரம்  புத்தளம் தொலைபேசி: 0718618749

கொழும்பில்:
எம்.ஏ.சி.எம். அமீன் 11- 1/1 ரூபன் பீரிஸ் மாவத்தை கலுபோவில தெஹிவல தொலைபேசி:0773187222

நீர்கொழும்பில்:
எம்.எஸ்,எம்.ஜான்சின் 12, மூர் வீதி, பெரியமுல்ல,நீர்கொழும்பு தொலைபேசி: 0773292430

பாணந்துறையில்:
எம்.எப். இக்பால், 28, நடல்பொல ரோட், ஹேனமுல்ல, பானதுறை தொலைபேசி: 0725629282

வவுனியாவில் :
எம்.ரி. நஸார், ரஹ்மானியா இல்லம், பட்டானிச்சூர் வவுனியாதொலைபேசி: 0777771955

முல்லைத்தீவில்:
கல்லாஜ் - 0715168647

எம்.ஐ. கைசர்கான் - 0777398797ஹாதி மோடர்ஸ், பிரதான வீதி, தன்னியூற்று, முள்ளியவளை. 

எஸ்.எஷ். ரிச்னி, முல்லையூர், நுரைச்சொலை, புத்தளம். 

கிளிநொச்சியில்
ஏ.ஏ.தாரீக்   0779487787

எf. பாயிஸ் 6, மீனாட்சிபுரம் கோவில் வீதி ஆனந்தபுரம் கிளிநொச்சி

ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்தோர் தங்கள் ஆக்கம் தயாரானதும் 0770476555/ 0773292430 இலக்கத்துக்கு குறுந்தகவல் மூலம் விடயத்தை தெரிவித்தால்  உங்களுடைய ஆக்கங்களை சேகரிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய முடியும். தூர இடங்களைச் சேர்ந்தவர்கள் தம்து ஆக்கங்களை பின்வரும் முகவரிக்கு தபால் அல்லது பொதித் தபாலில் அனுப்பவும். 

எம்.எஸ்,எம்.ஜான்சின் 12, மூர் வீதி, பெரியமுல்ல, நீர்கொழும்பு தொலைபேசி: 0773292430

ஆக்கங்கள் அனுப்பவேண்டிய  காலம் 2017 ஒக்டோபர் முதலாம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை. பெரியளவிலான ஆக்கங்கள் சமர்ப்பிப்பது பற்றிய திகதி பின்னர்  தரப் படும். 

குறிப்பு: ஆக்கங்கள் போட்டோக்கள் எதுவும் திருப்பி அனுப்பப் பட மாட்டாது. எனவே பிரதிகளை நீங்கள் வைத்துக் கொள்வது நல்லது.

No comments

Powered by Blogger.