Header Ads



கொக்கேன் சம்பவத்திற்கும், சதொசவிற்கும் தொடர்பு இல்லை - பாராளுமன்றத்தில் ரிஷாட்

கொக்கேன் சம்பவத்திற்கும் சதொச நிறுவனத்திற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லையென  கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரன, பாராளுமன்றத்தில் இன்று (20.07.2017) எழுப்பிய வாய் மூல வினாவிற்கு பதில் அளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். 

சதொசவை நான் பொறுப்பேற்ற பின்னர், இந்த நிறுவனம் எந்தவொரு பண்டங்களையும் இறக்குமதி செய்யவில்லையெனவும் தனியார் வழங்குனர் மூலமே இந்தப் பொருட்களை இறக்குமதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்தார். 

சீனிக் கொள்கலனில் கொக்கேன் இருந்ததை கண்டுபிடித்த சதொச ஊழியர்களே பொலிஸாருக்கு தகவல் கொடுத்தனர்.  இப்போது அந்த விடயம் தொடர்பில் விசாரணை இடம்பெற்று வருகின்றது. இந்த விசாரணை முடிவுபெறும் வரை, இந்தப் பிரச்சினையுடன் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்திடமிருந்து சதொச நிறுவனம் எந்தப் பொருட்களையும் கொள்வனவு செய்வதை, தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.  

No comments

Powered by Blogger.