Header Ads



'டொக்­ஸொரின் கைட்ஸ்' நுளம்புகளை, நாடுபூராகவும் பறக்கவிட திட்டம்

நாட்டில் தற்­போது டெங்கு நோயின் தாக்கம் கடு­மை­யாக அதி­க­ரித்­துள்ள நிலையில் அதனை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்ட போதிலும் டெங்கு  நோயா­ளர்­களின் எண்­ணிக்கை தொடர்ச்­சி­யாக உயர்ந்து கொண்டே  செல்­கி­றது. தற்­போ­தைய நிலை­மையில் நாட­ளா­விய ரீதியில் 80 ஆயிரம் டெங்கு நோயா­ளர் கள் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ள­துடன் 230 பேர் டெங்கு நோய் கார­ண­மாக உயி­ரி­ழந்­துள்­ளனர்.

அத்­துடன் வைத்­தி­ய­சா­லை­க­ளிலும் டெங்கு நோயா­ளர்கள் நிறைந்து காணப்­ப­டு­வ­துடன் இட நெருக்­க­டியும் ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந் நிலையில் டெங்கு நோயை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அரசாங்கம் உரிய நட­வ­டிக்­கை­களை  எடுக்­க­வில்லை என்ற குற்­றச்­சாட்டுக் கள் பர­வலாக எழுந்­துள்ள நிலையில் அர­சாங்கம் புது­வி­த­மான திட்­ட­மொன்றை தற்­போது நாட்டில் அறி­மு­கப்­ப­டுத்­த­வுள்­ள­தாக தகவல் கள் தெரி­விக்­கின்­றன.

அதா­வது டெங்கு நுளம்­பு­களை உண­வாக எடுத்துக் கொள்ளும் மற்­று­மொரு உருவத்தில் பெரிய அள­வி­லான நுளம்பு வகையை சூழலில் உலாவ  விடு­வதன் மூலம் டெங்கு நுளம்பின் பெருக்­கத்தை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. 

இது தொடர்­பான பரி­சோ­த­னைகள் தற்­போது முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இது குறித்து மருத்­துவ ஆய்வு நிறு­வ­னத்தின்  சார்பில் வைத்­திய நிபுணர் சாக­ரிக்கா சம­ர­சிங்க சர்­வ­தேச ஊட­க­மொன்­றுக்கு இவ்­வாறு தெரி­வித்­தி­ருக்­கிறார்.

இந்தப் பரி­சோ­தனை மிகவும் பர­ப­ரப்­பின்றி மௌன­மான முறையில் முன்­னெ­டுக்கப்­ப­டு­கி­றது. இதில் நாங்கள் விளம்­ப­ரத்தை தேட­வில்லை. நாம் பரி­சோ­த­னையின் நிமித்தம் இந்த நுளம்­பு­களை பல்­வேறு பிர­தே­சங்களில் உலாவ விட்டோம். இரு­ளுக்கு சாபம்­வி­டாமல் மெழுகு திரி­யொன்­றை­யா­வது கொளுத்த வேண்டும் என்ற எண்­ணக்­க­ருவின் அடிப்­ப­டை­யி­லேயே இதனை நாங்கள் முன்­னெ­டுக்­கின்றோம். நீண்­டகால ரீதியில் டெங்கு நுளம்­பு­களை அழிப்­ப­தற்கு இது ஒரு சிறந்த முறை­யாகும். இந்த மிகப்­பெ­ரிய நுளம்பின் பெயர் "டொக்­ஸொரின் கைட்ஸ்" ஆகும். இந்த நுளம்பு உரு­வாகி ஆரம்ப காலத்தில் மட்­டுமே டெங்கு நுளம்­பு­களை உண­வாக உட்கொள்ளும்.  

அதன் பின்­னரும் கூட மனி ­தனின் இரத்­தத்தை உறிஞ்­சாது.  மாறாக பூவி­லுள்ள தேனை உறிஞ்­சிக்­கு­டிக்கும். அத்­துடன் இலை போன்­ற­வற் றையே உட்­கொள்ளும். நுளம்­பு­களை கொல்லும் நுளம்பு என்றே இதனை ஒரு­சிலர் அறி­மு­கப்ப­டுத்­து­கின்­றனர். இதனால் ஒரு­போதும் மனி­தனை குத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது. காரணம் அதன் கொடுக்­கா­னது முன்­பக்­க­மாக வளர்ந்து பின் பக்கம் திரும்­பி­யி­ருக்கும்.  எனவே அதனால் மனி­தனைகுத்தி இரத்­தத்தை குடிக்க முடி­யாது என்று வைத்­திய நிபுணர்   பீ.பீ.சி. செய்திச் சேவைக்கு கூறி­யி­ருந்தார். 

தற்­போது இந்த நுளம்­புகள் பேரா­தனை தாவ­ர­வியல் பூங்கா, மீரி­கம குண்­ட­சாலை ஆகிய பிர­தேச சூழல்­களில் உலா­வ­வி­டப்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. 

""எப்­ப­டி­யி­ருப்­பினும் இந்த நுளம்­பு­க­ளி­லி­ருந்து மட்டும் நாம் டெங்கு நுளம்­பு­களை அழித்து விட முடி­யாது. எமது சுற்றுச் சூழலை சுத்­த­மாக வைத்­தி­ருப்­பதன் மூலமும் டெங்கு நுளம்­புகள் பரவும் இடங்­களை அழிப்­பதன் மூல­முமே கட்­டுப்­ப­டுத்த முடியும். இதனை மக்கள் மனதில் கொள்ள வேண்­டி­யது அவ­சியம்"  என்றும்  மருத்­துவஆய்வு நிறு­வ­னத்தில் சார்பில் வைத் திய நிபுணர் சாக­ரிக்க சம­ர­சிங்க குறிப்­பிட்­டி­ருக்­கிறார். 

இதே­வேளை இது தொடர்பில் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரட்ன கேசரிக்கு தகவல் தரு­கையில்,

கேள்வி : வேறு நாடு­களில் இந்த முறைமை பின்­பற்­றப்­ப­டு­கின்­றதா?

பதில் :    ஐரோப்­பிய நாடுகள் உள்­ளிட்ட  பல்வேறு நாடுகளில் இந்த முறைமை பின்பற்றப்பட்டு வருகிறது. இது  வெற்றியும் அளித்துள்ளது.

கேள்வி : இந்த நுளம்புகள் வெளிநாடுக ளிலிருந்தா கொண்டுவரப்படுகின்றன?

பதில் : அவ்வாறு தான் முதலில் எண்ணி னோம்.  ஆனால் சிங்கராஜ வனத்தில் தேவைக்கு அதிகமாகவே இந்த நுளம்புகள்  காணப்படுகின்றன என்றார்.

No comments

Powered by Blogger.