Header Ads



ஐ.நா. அதிகாரியுடன், சிராஸ் சந்திப்பு - முக்கிய ஆவணங்கள் கையளிப்பு

மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான ஐக்கிய நாடுகள் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் முஸ்லிம் சட்டத்தரணிகள் சார்பில் சிராஸ் நூர்தீனை இன்று (11) கொழும்பில் சந்தித்துள்ளார்.

சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பில், முக்கிய பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் கூறினார். 

பொதுபல சேனாவின் முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கை, அவற்றுக்கு எதிராக பொலிஸார் பாரபட்சமாக செயற்பட்டமை, இதுதொடர்பில் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாடுகள், நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகள் உள்ளிட்ட மிகமுக்கிய ஆவணங்கள் ஆதாரபூர்வமாக சிராஸ் நூர்தீனால் ஐ.நா. அறிக்கையாளிடம் கையளிக்கப்பட்டன.

ஞானசாருக்கு எதிராக மாத்திரம் 48 முறைப்பாடுகள் உள்ளன.

45 நாட்களில்  முஸ்லிம்களுக்கு எதிராக 25 வன்முறைச்ச சம்பவங்கள் நடந்துள்ளன. எனினும் இதற்காக 5 பேர் மாத்திரமே கைது செய்யப்பட்டனர்.

நீதிமன்றத்திற்குள்ளும் நாங்கள் நீதியைத் தேட வேண்டியுள்ளது.

சட்டத்தை சகலருக்கும் சரிசமமாக பிரயோகிக்க வேண்டும். எனினும் முஸ்லிம்கள் விடயத்தில் சட்டம் சரிசமமாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இதனால்  முஸ்லிம்கள் சட்டத்தில் நம்பிக்கையிழக்கும் நிலை உருவாகும். யுத்தம் முடிந்துவிட்ட நிலையில் ஒரு சமூகம் சட்டத்தில் நம்பிக்கை இழப்பதானது நாட்டின் வளர்ச்சிக்கு உதவமாட்டாது எனவும் சிராஸ் நூர்தீன் ஐ.நா. அதிகாரியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல்வேறு சட்டத்தரணிகள் பங்கேற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் தரப்பு சார்பில் சிராஸ் நூர்தீன் பங்கேற்றார்.

மேலும் இவை தொடர்பில் தாம் உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டுவருதாக ஐ.நா. அதிகாரி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

2

இவர் சிறிலங்காவில் தங்கியிருக்கும் போது, அரசாங்க உயர்மட்ட பிரதிநிதிகள், வெளிவிவகார, சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி, நீதி, பாதுகாப்பு, நிதி, ஊடகம், சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியமர்வுக்குப் பொறுப்பான  அமைச்சர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய காவல்துறை ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகளையும், ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார்.

ஐ.நா சிறப்பு அறிக்கையாளர், பென் எமர்சன்,  தனது பயணத்தின் முடிவில், தனது அவதானிப்புகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்காக, வரும் ஜூலை 14ஆம் நாள் கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்துவார்.

அதேவேளை இவர் தனது கண்டறிவுகள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பான விரிவான அறிக்கையை, 2018 மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பார்.

No comments

Powered by Blogger.