Header Ads



ஜனாதிபதி முறைமையை விரும்பும் ரணில்

நாடாளுமன்றிற்கு பொறுப்பு சொல்லும் ஓர் ஜனாதிபதி முறைமை அவசியம் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற டட்லி சேனாநாயக்க நினைவுப் பேருரையில் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

கடந்த ஒரு தசாப்த காலமாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை வலுப்படுத்தவே நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்றிற்கு பாரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லாத ஆட்சி முறையினால் நாடு இன்று பாரிய கடன் சுமையை எதிர்நோக்கியுள்ளது.

இதன் காரணமாக 2020ம் ஆண்டளவில் நாம் 4.2 ட்ரில்லியன் ரூபா கடன் செலுத்த வேண்டியுள்ளது. அரச நிதி நாடாளுமன்றின் ஊடாக நெறிப்படுத்தாமையே இதற்கான காரணமாகும்.

நாடாளுமன்றிற்கு பொறுப்புச் சொல்லக்கூடிய வகையில் ஆட்சி முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.