July 19, 2017

"த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும், காடுக‌ள் உரிய‌வையல்ல‌ - முஸ்லிம்க‌ள் த‌மிழ‌ருடைய‌ காடுக‌ளை அழிக்கவுமில்லை"

முஸ்லிம் அர‌சிய‌ல்வாதிக‌ள் த‌மிழ‌ருக்கு சொந்த‌மான‌ காடுக‌ளை அழிக்கிறார்க‌ள் என‌ சில‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ள் தெரிவிப்ப‌தை உல‌மா க‌ட்சி வ‌ன்மையாக‌ க‌ண்டிப்ப‌துட‌ன் இத‌ன் உண்மைத்த‌ன்மையை நிரூபிக்க‌ முஸ்லிம் க‌ட்சித்த‌லைவ‌ர்க‌ளும், குற்ற‌ம் சாட்டும் த‌மிழ் த‌ர‌ப்பும் க‌ல‌ந்து கொள்ளும் ப‌கிர‌ங்க‌ மேடையை அமைக்க‌ த‌மிழ் த‌ர‌ப்புக்க‌ளால் முடியுமா என‌வும் கேள்வி எழுப்பியுள்ள‌து.

இது ப‌ற்றி உல‌மா க‌ட்சித்த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் மௌல‌வி தெரிவித்திருப்ப‌தாவ‌து,

முப்ப‌து வ‌ருட‌ம் காடுக‌ளுக்குள் வாழ்ந்து கொண்டு அவ‌ற்றை அழித்து வாழ்ந்த‌ சில‌ருக்கு இப்போது காடுக‌ளின் மீது காத‌ல் வ‌ந்துள்ள‌து. இத‌ன் கார‌ண‌மாக‌ முஸ்லிம்க‌ள் காடுக‌ளை அழிக்கிறார்க‌ள் என‌ சில‌ சிங்க‌ள‌ இன‌வாதிக‌ள் இன‌வாத‌த்தை கிள‌ப்புவ‌து போல் த‌மிழ் ம‌க்க‌ளில் சில‌ரும் சில‌ த‌மிழ் ஊட‌க‌ங்க‌ளும் பொய் குற்ற‌ச்சாட்டுக்க‌ளை  முன் வைப்ப‌து த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

காடுக‌ள் த‌மிழ் ம‌க்க‌ளுக்குரிய‌வை என்றும் அவ‌ற்றை பாதுகாக்க‌ வேண்டும் என‌வும் த‌மிழ‌ர்க‌ளும் சிங்க‌ள‌வ‌ர்க‌ளும் ஒன்று ப‌ட்டால் முஸ்லிம்க‌ளைஅட‌க்கி விட‌லாம் என்ற‌ தோர‌ண‌யில் த‌மிழ் ஊட‌க‌ம் ஒன்று அண்மையில் க‌ருத்து வெளியிட்டிருந்த‌து. 

காடுக‌ள் த‌மிழ‌ர்க‌ளுக்கு ம‌ட்டும் உரிய‌வை அல்ல‌. அவை முழு இல‌ங்கைய‌ர்க‌ளுக்கும் சொந்த‌மான‌தாகும். புலிக‌ளின் போராட்ட‌த்தின் போது அவ‌ர்க‌ள் காடுக‌ளுக்குள் ம‌ர‌ங்க‌ளை வெட்டிவிட்டுத்தான் த‌ம‌து முகாம்க‌ளை அமைத்திருந்தார்க‌ளே த‌விர‌ காடுக‌ளுக்கு மேல் ஆகாய‌த்தில் முகாம்க‌ளை அமைக்க‌வில்லை. அதே போல் இராணுவ‌ம் குண்டுக‌ளைப்போட்ட‌ போது முத‌லில் அழிந்த‌து ம‌ர‌ங்க‌ள்தான்.  அப்போதெல்லாம் காடுக‌ள் மீது வ‌ராத‌ காத‌ல் இப்போது இவ‌ர்க‌ளுக்கு வ‌ந்துள்ள‌து சிரிப்பை த‌ருகிற‌து.

முல்லைத்தீவில் முஸ்லிம்க‌ள் வாழ்ந்த‌ ப‌குதிக‌ள் முப்ப‌து வ‌ருட‌ கால‌த்துள் காடாகிப்போயுள்ள‌தால் அத‌னை  திருத்தி முஸ்லிம்க‌ளை மீள் குடியேற்ற‌ அர‌சு ந‌ட‌வ‌டிக்கை எடுக்கிற‌தே த‌விர‌ எந்த‌வொரு முஸ்லிமும் சுய‌மாக‌ காடு திருத்த‌ முணைய‌வில்லை என்ப‌தை முஸ்லிம் த‌மிழ் உற‌வில் அக்க‌றையுள்ள‌வ‌ர்க‌ள் என்ற‌ வ‌கையில் உல‌மா க‌ட்சி தெளிவாக‌ சொல்லிக்கொள்கிற‌து.

அத்துட‌ன் த‌மிழ் புலிக‌ளால் அனைத்தும் கொள்ளையிட‌ப்ப‌ட்டு வெளியேற்ற‌ப்ப‌ட்ட‌  அப்பாவி முஸ்லிம்க‌ளின் மீள் குடியேற்ற‌த்துக்காக‌ அமைச்ச‌ர் ரிசாத் ப‌தியுதீன் ம‌ட்டுமே முய‌ற்சி செய்கிறார். வேறு எந்த‌ முஸ்லிம் அமைச்ச‌ரும் இதில் அக்க‌றை கொள்ள‌வில்லை என்ப‌துட‌ன் அமைச்ச‌ர் ரிசாத் அர‌சாங்க‌த்தினூடாக‌ முஸ்லிம்க‌ளின் வாழ்விட‌ங்க‌ளில் அவ‌ர்க‌ளை மீள்குடியேற்ற‌ முய‌ற்சி செய்கிறாரே த‌விர‌ அவ‌ர் த‌மிழ் ம‌க்க‌ளின் காணிக‌ளை பிடிக்க‌ முணைய‌வுமில்லை, ம‌னித‌ன் ஏற்க‌ன‌வே வாழாத‌ காடுக‌ளை அழிக்க‌ முணைய‌வுமில்லை என்ப‌தை எம்மால் உறுதியாக‌ கூற‌ முடியும். இதில் ச‌ந்தேக‌ம் இருக்குமாயின் இது ப‌ற்றிய‌ திற‌ந்த‌ விவாத‌த்துக்கு ஏற்பாடு செய்யுமாறு உல‌மா க‌ட்சி த‌மிழ் தர‌ப்புக்க‌ளுக்கு அழைப்பு விடுக்கிற‌து.

அதே போல் உண்மையில் த‌மிழ் ம‌க்க‌ளால் விர‌ட்டிய‌டிக்க‌ப்ப‌ட்ட‌ வ‌ட‌ மாகாண‌ முஸ்லிம்க‌ளுக்கு த‌மிழ் ம‌க்க‌ளே முன் வ‌ந்து காடாகிப்போயிருக்கும் அவ‌ர்க‌ள் வாழ்விட‌ங்க‌ளை சுத்த‌ப்ப‌டுத்தி மீள் குடியேற்றி த‌ம‌து த‌வ‌றுக்கு பிர‌ய‌ச்சித்த‌ம் தேடியிருந்தால் அது த‌மிழ் முஸ்லிம் வ‌ர‌லாற்றில் சிற‌ந்த‌ எடுத்துக்காட்டாக‌ இருந்திருக்கும். அத‌னை விடுத்து ம‌ர‌த்தால் விழுந்த‌வ‌னை மாடு குத்துவ‌து போல் சில‌ த‌மிழ் இன‌வாதிக‌ள் ந‌ட‌ந்து கொள்வ‌து த‌விர்க்க‌ப்ப‌ட‌ வேண்டும்.

த‌மிழ் சிங்க‌ள ஒற்றுமை வ‌ர‌ வேண்டும் என்ப‌தைத்தான் முஸ்லிம்க‌ள் நாமும் விரும்புகிறோம். நீங்க‌ள் இருவ‌ரும் ஒற்றுமையாய் இருந்திருந்தால் முஸ்லிம்க‌ள் நாம் ப‌ல‌ உயிர்க‌ளை த‌மிழ் போராளிக‌ளால் இழ‌ந்திருக்க‌ மாட்டோம். வ‌ட‌க்கிலிருந்தும் வெளியேற்ற‌ப்ப‌ட்டிருக்க‌ மாட்டோம்.

4 கருத்துரைகள்:

முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைக்காதீர்கள்.முல்லைத்தீவில் காடுகளே அழிக்கப்படுகிறது.அங்கு எந்த முஸ்லீம் குடியிருப்பும் இல்லை.ஏற்கனவே இலங்கையில் வரட்சிகூடியமாவட்டம் முல்லை தீவு.
ஏதோதமிழர் தான் காடளிப்பை எதிர்ப்பது போல பேசவேண்டாம்.வில்பத்து விவாகாரத்தை கேட்டது யார்.
யுத்தாத்தால் பாதிக்கப்பாட்ட முல்லை மக்களை மரத்திலிருந்து விழுந்தவனை மாடெறி மிதிப்பது போல் சீண்டிப்பார்த்தார் நாம் எம் ஒற்றுமையை காட்டினோம்.

Hello Mr உலமா கட்சி தலைவரே, உப்பு-சப்பில்லாத statement களை விடாதீர்கள்.

யுத்தத்தின் போது ஏற்றபட்ட சேதங்களுக்காக உங்கள் சட்டவிரோத காடழிப்பை நியாயப்படுத்த முடியாது. ஒரு கொலையை இப்போ செய்துவிட்டு ஆமியும் புலிகளும் செய்தவர்கள் தானே என்று சொல்லி சிரித்து பாருங்கள் தெரியும்.

அது உங்களின் நிலமெனில் உங்கள் காணி பத்திரங்களை எங்கே?. புலிகள் அதையும் பறித்திருந்தால் சட்டபடி அதை முதலில் மீழ எடுங்கள்.

This comment has been removed by the author.

Mannaasai, pennaasai, porulaasai ellaam(muslim, Sinhalese Vida) athiham ullavanthaane. Inavaathi tamilargal. PR cancel panni, African country anupinaal sari.

Post a Comment