Header Ads



பஷீர் நிராகரித்தார், அதாவுல்லா நியமிக்கப்படுவார் - ஆங்கிலப் பத்திரிகை தகவல்

கிழக்கு மாகாண ஆளுனராக தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரான முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று வலுவாக எதிர்பார்க்கப்படுவதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிறிலங்கா அதிபரின் செயலராக ஒஸ்ரின் பெர்னான்டோ பதவியேற்கவுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுனர் பதவியில் இருந்து அவர் நாளை விலகவுள்ளார்.

இதையடுத்தே, கிழக்கு மாகாண ஆளுனராக, ஏ.எல்.எம். அதாவுல்லா நியமிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், இந்த நியமனம் இன்னமும் அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

கிழக்கு மாகாண ஆளுனர் பதவிக்கு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகு தாவூத்தை நியமிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன விரும்பியதாகவும், எனினும் அவர் அதனை நிராகரித்து விட்ட நிலையிலேயே, அதாவுல்லாவை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு மாகாணசபையின் ஆயுள்காலம் வரும் செப்ரெம்பர் 25ஆம் நாளுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.