Header Ads



தேசிய மீலாத் குழு, யாழ்ப்பாணம் செல்கிறது, அனைவரையும் சமூகம் தருமாறு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் தேசிய மீலாத் விழாவின் இறுதி நிகழ்ச்சிகளை நடாத்த           அமைச்சர் எம்.எச். ஏ. ஹலீம் தீர்மானித்துள்ளார்கள். இதன் அடிப்படையில் ஏற்கனவே தேசிய மீலாத் நிகச்சிக்கான வழிநடாத்தும் குழு அமைச்சரால் தெரிவு செய்யப்பட்டுள்ளதை அறிவீர்கள். 

இதன் அடுத்த கட்டமாக மீலாத் விழா நிகச்சிகளின் பல்வேறு அம்சங்களை வழிநடாத்தும் குழுவுடன் இனைந்து வேலை செய்வதற்கான  செயற்குழுக்கள்  நியமிக்கப் படவுள்ளது. இந்த குழுக்களுக்கான முன்மொழிவுகளை பெற்றுக் கொள்ளவும் யாழ்ப்பாணத்திலுள்ள நிலைமைகளை ஆராயவும் தேசிய மீலாத் குழுவின் முக்கிய பிரிவினர் யாழ் வருகை தரவுள்ளனர். 

இந்தக் குழுவின் முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் ஆலோசகர் முயீனுத்தீன் , பணிப்பாளர், எம் ஆர். எம். மலிக்  உட்பட யாழ் தேசிய மீலாத் குழுவின் வழிநடாத்தும் குழுவின் உறுப்பினர்களும் கலந்து கொள்வார்கள். 

முஸ்லிம் கலாச்சார திணைக்களத்தின் அதிகாரிகளுக்கான யாழ் முஸ்லிம்களின் சந்திப்பு 22.07.2017 சனிக்கிழமை அன்று இரண்டு கட்டங்களாக நடைபெறும்

1. காலை 9.00 - 10.30 மணி வரை யாழ் மீலாது குழுவின் வழிநடத்தும் குழு உறுப்பினர்கள் உடனான சந்திப்பு.

இடம்:- யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் புதிய கருத்தரங்கு மண்டபம்.

2. காலை 10.30 - பிற்பகல்12 மணி வரை யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுடனான சந்திப்பு.

இடம்:- யாழ் ஒஸ்மானியா கல்லூரியின் கேட்போர் கூடம்.

இவ்வேளை மேற்குறிப்பிட்ட செயற்குழுக்கள் தெரிவு நடைபெறும்.

இந்த  மீலாத் இதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு எம். எஸ். அப்துல் ரஹீம, எஸ். ஏ. சி. மஹ்ரூப், எஸ் ஏ. சி. முபீன், அஷ்ஷெய்க் பி.ஏ.எஸ். சுபியான், ஜமால் மொஹிதீன் , ஆர்.கே. சுவர்க்ககான் (சுனீஸ்) ஐ. எஸ். எம் ரொக்கீஸ்  போன்றோர்  கூட்டத்துக்கான  ஏற்பாடுகளை மேற்கொள்வார்கள்.     

மேலும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் மதரசாக்கள்   போன்றவற்றின் நம்பிக்கையாளர்களும்  இந்த கூட்டத்துக்கு சமூகமளிப்பதன் மூலம் மீலாத் அபிவிருத்தித் திட்டத்தின் பணிகள் எந்தளவுக்கு முன்னெடுக்கப் பட்டுள்ளன என்பது பற்றியும்  ஆய்வு செய்ய முடியும். எனவே இவர்கள் 10.30 மணியளவில் குழுவைச் சந்திக்கலாம். 

எனவே இந்த கூட்டத்துக்கு அனைவரையும் சமூகம் தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

யாழ் தேசிய மீலாத் விழா குழு.

No comments

Powered by Blogger.