Header Ads



"அல்லாஹ்வின் உதவியால், சுகம் கிடைக்கும்" (மனதை உருக்கும் சம்பவம்)

திடீரென்று அழைப்பு மணியோசை வருகிறது. ‘ரெம்ப அவசரம் சீக்கிரம் வாருங்கள்’ என்று பதட்டத்துடன் அந்த அழைப்பு வந்தது. ஆம் அது ஒரு அறுவை சிகிச்சை டாக்டர். அவருக்கு அவசர அழைப்பு வந்தது. அவர் தன்னால் முடிந்தளவு வேகமாக வைத்தியசாலைக்கு வருகை தருகிறார்.

அவர் வந்த வேகத்தில் ஆப்ரேஷன் தியடருக்குள் நுளையமுன் நோயாளியின் தந்தை குறுக்கிட்டு அவரின் முகத்தில் பாய்ந்து விழுந்து கத்துகிறார். ஏன் இவ்வளவு தாமதம்? என் மகன் உயிருக்கு ஆபத்தான நிலையில் வருத்தத்தோடு கதறுகிறான்.. உங்களுக்கு கொஞ்சம் கூட உணர்வே இல்லையா? உயிருக்கு போராடும் நோயாளிகள் விடயத்தில் இவ்வளவு அசிரத்தையாக நடந்து கொள்கிறீகள். நீங்க நினைத்த நேரம் வாரீங்க போரீங்க! ஒரு அவசரம் என்றால் இப்படியா நடந்து கொள்வது? என்று டாக்டர் மீது கடுப்பாக சீரிப் பாய்ந்து விடுகிறார்.

ஆனால் டாக்டர் புன்முறவல் பூத்தவண்ணம் கொஞ்சம் பொறுங்கோ. தயவு செய்து என்ட வேலையை செய்ய இடம் கொடுங்கோ. உங்கட மகனுக்கு இறை அருளால் ஒன்றும் நடக்காது. எல்லாம் இறை உதவியால் நல்லபடியாக நடந்து முடியும் என நம்பிக்கை வைங்கோ. அல்லாஹ்ட உதவியால் குணம் குடைக்கம்.

தந்தை: ஏன் இவ்வளவு அலட்சியமாக பதில் சொல்ரீங்க. உங்கட மகனுக்கு இப்படி ஒரு சோதனை வந்தால் அமைதியா இருப்பீங்களா? யாருக்கும் அறிவுரை சொல்வது என்றால் லேசிதான்.. சி.. ஆத்திரத்தை கொட்டி முகத்தை சுளித்தார்.

டாக்டர் அந்த அப்பாவித் தந்தையோடு மேலும் கதை வளர்க்காமல் ஒபரேஷன் தியடருக்குள் நுழைந்தார். சுமார் இரண்டு மணித்தியாளங்கள் கழித்து அவச அவசரமாக வந்து நோயாளியின் தந்தையிடம் சொன்னார்: அல்ஹம்து லில்லாஹ் உங்கட மகன் நல்லா இருக்கிறார். என்னை மன்னித்து விடுங்கள் எனக்க இன்னொரு அவசர வேலை இருக்கிறது என்று கூறிவிட்டு கிடுகிடுவென்று சென்று விட்டார். அந்த தந்தையின் டாக்டர் மனம் நோகும் படி எந்த வார்த்தையும் கூறவில்லை. வந்தார். கடமையை முடித்தார். இன்சொல் பகர்ந்தார். சென்றுவிட்டார்.

பின் நர்ஸ் வெளியில் வந்ததும் இந்த திமிர்பிடித்த டாக்டருக்கு என்ன நேர்ந்துள்ளது.? என அந்த தந்தை மேலும் நச்சரிக்க தொடங்கினார். அவருக்கு டாக்டர் மீது வந்த கோபம் இன்னும் தனியவில்லை.

நர்ஸ் : இங்க பாருங்கோ! சும்மா அவசரப்பட்டு டாக்டரை குறை கூறாதீங்கோ. அவர் வார வழியில அவர்ட மகன் வாகன விபத்தொன்றில் இறந்துள்ளார். இருந்தும் கூட உங்கட மகன்ட நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்று தெரிந்ததும் எமது அவசர அழைப்பை ஏற்று சொந்த மகனை கவனிக்காம இங்கு வந்துவிட்டார். உங்கட பிள்ளையின் உயிரைக் காப்பாற்றி விட்டு அவருடைய பிள்ளையின் ஜனாஸாவில் கலந்து கொள்வதற்காக இப்போ அவசரமாக சென்றுவிட்டார்.

நம்மை சூழ எவ்வவோ உள்ளங்கள்… அந்த உள்ளங்கள் புரிந்துணர்வோடும் பொறுமையோடும் நடந்து கொண்டால் யாதார்த்தங்களைக் கண்டு வேதனைப்படும். மனம் உருகும். மன்னித்து வாழும். தேவையில்லாமல் வார்த்தைகளை கொட்டிவிட்டு பின்னர் கவலைப்படாது.

‘மனிதர்களை மன்னிக்க பழகுவோம். அவர்கள் பக்கம் பல நியாயங்கள் இருப்பதை ஏற்கும் உயர்ந்த உள்ளங்கள் தான் நல்ல நட்புக்கு தேவை’

மொழிமாற்றம், முஹம்மது பகீஹுத்தீன்
மீள்பார்வை

1 comment:

Powered by Blogger.