Header Ads



பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்­த இலங்கை, சவூதி அரே­பியா உத­விக்­கரம் நீட்டிக் கொண்­டி­ருக்­கி­றது - ராஜித

நாம் எமது சிறு பரா­யத்­திலே சிங்­கள முஸ்லிம் இரு சமூ­கங்கள் மத்­தி­யிலும் மிகவும் அன்­னி­யோன்­ய­மா­கவும் பரஸ்­பரம் சகோ­த­ரத்­துவ வாஞ்­சை­யு­டனும் வாழ்ந்து வந்தோம். ஆனால் இன்று ஒரு சிலர் மதங்­களை நிந்­தனை செய்து வரு­கின்­றார்கள். 

பௌத்­தர்கள், பௌத்த மதத்­திற்­கெ­தி­ரான வார்த்­தை­களைப் பிர­யோ­கித்து வரு­கின்­றார்கள். சிங்­க­ள­வர்கள் மேலான இனத்­த­வர்கள் என்று பெரு­மை­ய­டித்து வரு­கி­றார்கள். முஸ்­லிம்கள் இங்கு சிறு­பான்மை இனத்­த­வர்­க­ளாக வாழ்­கி­றார்கள்.

ஆனால் சகல இனத்­த­வர்­க­ளுக்கும் இங்கு வாழக்­கூ­டிய உரிமை வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இங்­குள்ள சகல இனங்­களும் பாது­காக்­கப்­பட வேண்டும். ஓர் இனம் மற்றோர் இனத்தை தாங்­கு­வ­தாயின் அது வெட்­கக்­கே­டான செய­லாகும். யாருக்கும் அநீதி அட்­டூ­ழியம் இழைக்கக் கூடாது என்று சுகா­தாரம், போசனை மற்றும் சுதேச வைத்­தி­யத்­துறை அமைச்சர் டாக்டர் ராஜித சேனா­ரத்ன கூறினார். 

பேரு­வளை, சீனன்­கோட்டை இக்ராஃ தொழில் நுட்ப பயிற்சி நிறு­வ­னத்தின் வெள்ளி விழாவும் அதன் 24 ஆவது சான்­றிதழ் வழங்கும் வைப­வமும் ஜாமிஆ நளீ­மிய்யா கேட்போர் கூடத்தில் நேற்று முன்­தினம் நடை­பெற்ற போது அதில் பிர­தம அதி­தி­யாகக் கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே டாக்டர் ராஜித மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இக்ராஃ நிறு­வன முகா­மைத்­துவ நம்­பிக்­கை­யாளர் சபைத் தலைவர் யாகூத் நளீம் தலை­மையில் இடம் பெற்ற மேற்­படி வைப­வத்தில் அமைச்சர் ராஜித மேலும் கூறி­ய­தா­வது,

முஸ்லிம் நாடு­களில் ஏனைய இனத்­த­வர்­களால் சுதந்­தி­ர­மாக வாழ முடி­யாது என்று ஒரு சிலர் கருத்து வெளி­யிட்டு வரு­கி­றார்கள். இணை­யத்­த­ளங்­க­ளிலும் பதி­வேற்றம் செய்­கி­றார்கள்.

உலகில் அப்­ப­டிப்­பட்ட நாடுகள் எங்கே இருக்­கின்­றன என்று நான் கேட்க விரும்­பு­கிறேன். நான் பல நாடு­க­ளுக்கும் பயணம் செய்­தி­ருக்­கிறேன். ஈராக், பலஸ்தீன் உட்­பட முஸ்லிம் நாடு­களில் கிறிஸ்­தவ மதத்­தினர் வாழ்­கி­றார்கள். பலஸ்தீன் அமைச்­ச­ர­வையில் கிறிஸ்­தவ அமைச்­சர்கள் அங்கம் வகிக்­கி­றார்கள். 

முஸ்லிம் நாடு­களில் வசித்து வரும் இதர சம­யத்­த­வர்­க­ளது விகி­தா­சார பட்­டியல் ஒன்றை எமது அமைச்சர் கபீர் ஹாஷிம் என்­னிடம் தரு­வ­தாக கூறி­யி­ருக்­கிறார்.

உண்மை இவ்­வா­றி­ருக்க, பொய் வதந்­தி­களைப் பரப்ப வேண்டாம் என்று சம்பந்­தப்­பட்­ட­வர்­களைக் கேட்­டுக்­கொள்­கிறேன். இலங்­கையை ஒரு பௌத்த நாடாக தவ­றாகக் காட்­டியும் இங்­குள்ள குடி­சன மதிப்­பீட்டில் தவ­றான கணக்­கினைக் காட்­டியும் கருத்­துகள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன. முஸ்லிம் சமூ­கத்தின் மத்­தியில் அடிப்­படை வாதிகள் இருக்­கின்­றனர். ஆனால் சிங்­கள, தமிழ், முஸ்லிம் சமூ­கத்தில் பெரும்­பா­லானோர் அப்­பாவி மக்­களே.

இந்­நாட்­டி­லுள்ள அர­சியல் வாதி­களும் ஒரு­சில ஊட­கங்­க­ளுமே நாட்டைக் குழப்ப தீ மூட்­டிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் அனை­வரும் நீதியின் முன் நிறுத்­தப்­பட வேண்டும். 

இலங்கை பொரு­ளா­தா­ரத்தில் வீழ்ந்­துள்ள நிலையில் சவூதி அரே­பியா எங்­க­ளுக்கு உத­விக்­கரம் நீட்டிக் கொண்­டி­ருக்­கி­றது. இன­வாதம், மத­வாதம் துடைத்­தெ­றி­யப்­பட வேண்டும்.

அனை­வரும் சம­மாக கரு­தப்­பட வேண்டும். நாம் அனை­வரும் ஐக்­கி­யப்­பட்டு நாட்டைக் கட்­டி­யெ­ழுப்ப முன்­வ­ர­வேண்டும். இன­வா­திகள்  எதனைச் சொன்­னாலும் நாம் அதற்கு துணை போகக் கூடாது. முஸ்­லிம்கள் இன­வாதி, அடிப்­ப­டை­வா­தி­க­ளாக மாறக்­கூ­டாது. நாம் அனை­வரும் சகோ­த­ரத்­து­வத்­துடன் கைகோர்ப்போம். பௌத்த தர்மம் மனி­தா­பி­மா­னத்­தையே போதிக்­கி­றது. ஏனைய சம­யங்­களும் அத­னையே போதிக்கின்றன என்றார்.

-ஏ.எல்.எம். சத்தார் + விடிவெள்ளி

No comments

Powered by Blogger.