Header Ads



புதிய யாப்பு மீது முஸ்­லிம்­க­ளுக்கு அக்­க­றையும், ஆர்­வமும் இல்லையா..? மந்தமாக இருப்பது ஏன்..??

 -ஏ.ஜே.எம்.நிழாம்-

உத்­தேச  புதிய யாப்பு பற்றி  நம்மில் எத்­தனை  முஸ்­லிம்­க­ளுக்கு ஆய்வும் அக்­க­றையும் ஆர்­வமும்  இருக்­கின்­றன என்­பது தெரி­ய­வில்லை. சிங்­க­ள­வரும் தமி­ழரும் இதில் தீவிரம் காட்­டு­கையில் முஸ்­லிம்­களின் ஈடு­பாடு   மந்­த­மாக இருப்­ப­தா­கவே நினைக்­கிறேன். மொத்­தத்தில்  சமூக நல  விட­யத்தில் ஆங்­கி­லேயர்  காலத்தில்  வாழ்ந்த முஸ்­லிம்­களை விடவும் யாப்பு விட­யத்தில் எங்களது  செயற்­பாடு  குறிப்­பிட்டுச் சொல்­லத்­தக்­க­தாக இல்லை என்றே கூற வேண்டும். 

குறிப்­பாக 1931 ஆம் ஆண்டின் டொனமூர்  யாப்பு  காலத்­திலும் 1946 ஆம் ஆண்டின் சோல்­பரி யாப்பின் காலத்­திலும் சமூ­கத்­துக்­காக முஸ்­லிம்கள் பாடு பட்டு முஸ்­லிம்­களின்  விட­யங்­க­ளையும் உள்­நு­ழைத்­தது பற்றி  இங்கு கூறி­யாக வேண்டும். 1989 ஆம் ஆண்டு முதல்  1946 ஆம் ஆண்டு  வரை  வாழ்ந்த  முஸ்லிம் தலை­வர்­க­ளுக்கு யாப்பு  விட­யங்­களில் ஆழ்ந்த  புலமை  இருந்­தி­ருக்­கின்­றது.

தற்­போது தனித்­தனி  தனித்­துவ கட்­சி­க­ளிலும்  தேசிய கட்­சி­க­ளிலும்  அரசு சார்­பாக 21 முஸ்லிம் எம்.பி.க்கள் இருக்­கி­றார்கள்.  இனப்­பி­ரச்­சினைத் தீர்­வுக்­கெனப் புதி­தாக ஒரு யாப்பை பல்­லின  வடிவில் உட­ன­டி­யாக  இயற்­று­மாறு ஐ.நா. இலங்­கை­யிடம்  கூறி­யி­ருக்­கையில்  சிங்­க­ள­வரும்  தமி­ழரும்  இதில் அதிக முனைப்பு காட்­டு­கையில்  உடனே இவர்கள் என்ன செய்ய வேண்டும் தெரி­யுமா முஸ்­லிம்­களின் அடிப்­படை உரி­மை­களும் புதிய யாப்பில் இடம் பெறச்  செய்­வ­தற்கு  தீவிரம் காட்ட வேண்டும். 

ஆங்­கி­லேயர் எல்லா இனத்­தி­ன­ரையும்  சுயா­தீ­ன­மாகச் செயற்­பட அனு­ம­தித்­தி­ருந்­தனர். கட்­சி­வாத அர­சியல் அதை  உத்­த­ர­வா­தப்­ப­டுத்­தா­த­தால்தான் பேரினப் போலி தேசிய கட்­சி­களின்  முஸ்லிம் தலை­மைகள் பேரின யாப்­பு­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு  வழங்­கி­விட்­டன. தற்­போது  தனித்­துவக் கட்­சி­களின் முஸ்லிம் எம்.பி.க்களும் போலி தேசியக் கட்­சி­களின் முஸ்லிம்  எம்.பி.க்களும்   பேரி­ன­வாதப் பிடி­யி­லேயே இருக்­கின்­றார்கள்.

பாது­காப்­புத்­து­றை­யிலும் உள்­ளூ­ராட்சி நிர்­வா­கத்­திலும் நீதித்­து­றை­யிலும் தொகுதி நிர்­ணயக் குழு­விலும் சிங்­க­ளவர் 100  வீத­மாக  இருக்­கையில் தான் அவர்­க­ளுக்கு  மத்­தியில் முஸ்­லிம்கள், சித­ற­லாக சிறு சிறு  தொகை­யி­ன­ராக  வாழ்­கி­றார்கள். சிறு­பான்மைக் காப்­பீ­டான  29 ஆம் ஷரத்தை  நீக்கி சிங்­க­ளவர்  பாது­காப்பு  உத்­த­ர­வா­தத்தை  யாப்பில் வழங்­கிய போதும் அண்­மையில் ஞான­சா­ரரின் அட்­டூ­ழி­யங்­களின் போது அது கிடைக்­க­வில்லை.

சிறு­பான்மைக் காப்­பீட்டுச்  சட்­ட­மான 29 ஆம் ஷரத்தும்  கூட  அன்று அலட்­சியம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. கிழக்கில்  திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றமும் மலை­ய­கத்தில் தமிழ் தோட்டத் தொழி­லா­ளரின்  பிரஜா உரிமை நீக்­கமும் இடம்­பெற்­றன. 

எனவே கிழக்கைச் சாராத முஸ்லிம் எம்.பி.க்களும் கிழக்கை மையப்­ப­டுத்­தியே யாப்பு  விட­யத்தில் இயங்க வேண்டும்.  ஐ.நா. கூறி­ய­படி சிறு­பான்­மை­க­ளையும் உள்­ள­டக்­கிய யாப்­பொன்றை இயற்றி அமுல்­ப­டுத்­து­வ­தாக  வாக்­கு­றுதி வழங்­கியே 2015 ஆம் ஆண்டு  ஜனா­தி­பதித் தேர்­தலில் மைத்­தி­ரி­பால சிறி­சேன சிறு­பான்­மை­களின் வாக்­கு­களை அதி­க­மாகப் பெற்று  வெற்­றி­ய­டைந்தார். எனவே இவர், உயர்­ பிக்குபீடங்கள் நான்­கி­னதும்  சொல்லைக்  கேட்டு  சிறு­பான்­மை­க­ளுக்கு வழங்­கிய  வாக்­கு­று­தியை மீறு­வது  வர­லாற்றுத் தவ­றா­கி­விடும். சிறு­பான்­மைகள் இவ­ருக்கு 100 வீதம் வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்கள். 

தற்­போது பல கட்­சி­க­ளையும் சேர்ந்த 21 முஸ்லிம் எம்.பி.க்களும் அரச சார்­பா­கவே இருக்­கின்­றனர். அவர்கள் ஒரே அணி­யாக  ஞான­சாரர் விட­ய­மாக  ஜனாதிபதியை சந்திக்க  அனு­மதி  கிடைக்­க­வில்லை. 

கிழக்கில் சிங்­க­ள­வரின் திட்­ட­மிட்ட குடி­யேற்­றத்தைத் தடுக்­கவே கிழக்கு தமிழர் வடக்­கோடு கிழக்கை சேர்த்­து­வி­டு­மாறு கோரு­கி­றார்கள். அதற்கு இசை­வா­கவே காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­களைக் கோரு­கி­றார்கள். இவை பிரி­வி­னையோ தனி­நாடோ அல்ல ஏனைய ஏழு மாகா­ணங்­க­ளையும் விட இணைந்த வடக்கு, கிழக்கின்  விஸ்­தீ­ரணம் அதிகம்  என்­பது  மட்­டு­மே­யாகும். மத்­திய  அரசின்  காணி மற்றும் பொலிஸ் அதி­கா­ரங்­க­ளுக்குப் புறம்­பாக மத்­திய அர­சுக்­குட்­பட்ட மாகாண ரீதி­யி­லான  காணி அதி­காரப் பிரிவும்  பொலிஸ்  அதி­காரப் பிரிவும்  இதற்கு  இருக்கும். யாப்பு மூலம் இதற்குக் காப்­பீடு வேண்டும். 

திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்றம் முஸ்­லிம்­க­ளையும் பாதிப்­பதால் தனித்து நின்று அதைத்­த­டுக்க முடி­யாது.  எனவே  கிழக்கை வடக்கு இணைப்­ப­தற்­குப்­ப­க­ர­மாக கிழக்கில் முஸ்லிம் அதி­கார அல­கையும் கரை­யோர மாவட்­டத்­தையும் கோரலாம். ஆக தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் கொடுத்து எடுப்­பதன் மூலமே கிழக்கில் இரு  சாரா­ரி­னதும் இருப்பு, வாழ்­வா­தா­ரங்­களும்  வர­லாறும் மொழியும்  கலையும் கலா­சா­ரமும்  பாது­காப்பும் நிலைக்கும். தொடர்ந்தும் இவர்கள் முரண்­பட்டு  நிற்­பார்­க­ளானால்  கிழக்கின் பெரும்­பான்­மையை இழந்து விடு­வார்கள்.  முஸ்லிம் அதி­கார  அல­குக்கும் தனி­யாக காணி மற்றும்  பொலிஸ் அதி­கா­ரங்கள் வேண்டும்.  

சிங்­க­ள­வர்­க­ளுக்கு  18 மாவட்­டங்­களும்  தமி­ழர்­க­ளுக்கு 7 மாவட்­டங்­களும் இருப்­பதால்  முஸ்­லிம்­க­ளுக்­கு­ரிய  கரை­யோர மாவட்­டத்­தையும் வழங்க வேண்டும் என்­பதே  நியா­ய­மாகும்.  தற்­போது புதிய யாப்­புக்கு முட்­டுக்­கட்டை ஏற்­பட்­டி­ருக்­கி­றது. மல்­வத்த, அஸ்­கி­ரிய ராமன்ய, அம­ர­புர ஆகிய பௌத்த பீடங்கள் நான்கும் புதிய யாப்பு இயற்­றப்­ப­டு­வதை எதிர்க்கக் காரணம் ஒற்­றை­யாட்­சியும் பௌத்த மத, பௌத்த சாசன சிங்­க­ள­மொழி  முன்­னு­ரி­மை­களும் நிறை­வேற்று  அதி­கா­ரமும் சுய நிர்­ணய உரி­மையும் இறை­மையும் பௌத்­தர்­க­ளிடம் இருக்­க­வேண்டும் என்­ப­தற்­கே­யாகும். 

No comments

Powered by Blogger.