July 27, 2017

கிழக்கை முஸ்லிம்கள் ஆக்கிரமிக்கிறார்களா..?

(விடிவெள்ளி பத்திரிகை இன்று 27 வியாழக்கிழமை வெளியிட்டுள்ள ஆசிரியர் தலையங்கம்

கிழக்கு மாகா­ணத்தில் முஸ்­லிம்­களின் ஆதிக்கம் மேலோங்­கிச்­ செல்­வதாகவும் அதிலிருந்து கிழக்கை மீட்பதற்கு தமிழ் மக்கள் ஒன்றுபட வேண்டும் என்றும் முன்னாள் பிர­தி­ய­மைச்­சரும் தமிழர் ஐக்­கிய சுதந்­திர முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான விநா­ய­க­மூர்த்தி முர­ளி­தரன் (கருணா அம்மான்) அழைப்பு விடுத்­துள்ளார். 

நாட்டில் அண்மைக் காலமாக வடக்குக் கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம் சமூகங்களிடையே முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும் வகையிலான செயற்பாடுகள் தொடர்ந்து வருகின்ற நிலையில் கருணா அம்மானின் இந்தக் கருத்து இந்த முரண்பாடுகளை மேலும் கூர்மைப்படுத்துவதாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. 

'' தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் ரணில் அரசும் கிழக்கை முஸ்­லிம்­க­ளுக்கு தாரை­வார்ப்­பதில் உறு­தி­யாக உள்­ளன. இதற்­கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்­டு­மென்றால் தமி­ழர்­க­ளா­கிய நாங்கள் வேறு­பா­டின்றி ஒற்­று­மைப்­பட வேண்டும். 

குறிப்­பாக வரு­கின்ற கிழக்கு மாகாண தேர்­தலில் தேசியம் என்று பேசி ஏமாற்­று­கின்ற தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பை தூக்கி எறிந்து விட்டு ஒரு தமிழ் முத­ல­மைச்­சரை உரு­வாக்­கு­வ­தற்கு கிழக்கு தமிழ் சமூகம் முன்­வ­ர­வேண்டும். 

இது வெறும் பதவிக்கோ புகழுக்கான போராட்டம் அல்ல. தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டம். இந்தப் போராட்டத்திற்கு வடக்கு வாழ் தமிழ் மக்களும் குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் உறவுகளும்  ஒத்துழைக்க வேண்டும்'' என்றும் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து ஆட்சி நடத்துகின்ற நிலையில் அதனைப் புறந்தள்ளுவதாகவும் புதிய தலைமைத்துவத்துவத்தை வலியுறுத்துவதாகவும் அவரது கருத்துக்கள் அமைந்துள்ளன. விரைவில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில் வாக்கு வங்கிகளைக் குறிவைத்து இவ்வாறான பிரசாரங்களை பல்வேறு தரப்பினரும் முன்னெடுத்து வருகின்றனர்.

ஒருபுறம் சிங்கள பெரும்பான்மைச் சமூகத்திலிருந்து சிறுபான்மையினருக்கு எதிரான அச்சுறுத்தல்களும் வெறுப்புப் பேச்சுக்களும் தொடர்கையில் மறுபுறம் தமிழ் –- முஸ்லிம் சமூகங்கள் தமக்கிடையே முரண்பட்டுக் கொள்வதானது துரதிஷ்டமானதாகும். வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையிலான அதிகாரப் போட்டி எதிர்காலத்தில் வன்முறைகளுக்கு இட்டுச் செல்லுமோ எனும் அச்சத்தை மேலாங்கச் செய்கிறது.

தற்போது வடக்கிலும் கிழக்கிலும் தொடரும் தமிழ் – முஸ்லிம் காணி உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகளை இரு தரப்பு அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முற்பட வேண்டும். அதில் தவறு விடுகின்ற போதுதான் சில சக்திகள் இதனை வேறு திசைகளில் திருப்பி முரண்பாட்டை கூர்மையடையச் செய்ய எத்தனிக்கின்றன என்ற யதார்த்தத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இவ்வாறான விடயங்களில் நெகிழ்வுப் போக்குடன் நடந்து கொள்கின்ற நிலையில் அவரது காலத்தில் முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை எட்ட முயற்சிக்க வேண்டியது முஸ்லிம் அரசியல் தலைமைகளின் கடப்பாடாகும். 

இது விடயமாக இரு தரப்புகளினதும் அரசியல், சிவில் மற்றும் மதத் தலைவர்கள் உடனடியாக பேச்சுவார்த்தைகளை நடத்தி சுமுக நிலையை தோற்றுவிக்க முன்வர வேண்டும். இன்றேல் மீண்டும் வடக்கு, கிழக்கில் இரத்த ஆறு ஓடுவதைத் தடுக்க முடியாது போய்விடும். 

4 கருத்துரைகள்:

நீங்கள் மிகப்பெரிய போராட்ட வீரர் என்பதில் சந்தேகமில்லை!
தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழம் பெற்றுக் கொடுத்த மாவீரர் நீங்கள்!

முஸ்லீம்கள் ஆர்வகோளாரால் இன்று தமிழரையும் எதிரீ ஆக்கி விட்டனர்.

ஆர்வக்கோளாறால் ஆனதென்னவென்று உம்
பார்வைக்கோறால் காணமுடிந்திருக்காது.
எம்முஸ்லிம்கள் பார்த்ததில்லை யாரையும் எதிரிகளாய்.
"காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் போல்"
எதிரியென்று நீர் நினைத்தால் உமக்கு யாரும் எதிரிகளே.

முஸ்லீம்கள் தொடர்பான விழிபுணர்வு தமிழர்மத்தியில் வந்து விட்டது.முஸ்லீம்களுடன் நல்லுறவு சாத்தியமில்லை 1000ஆண்டு ஆனாலும் புலீ புராணம் பாடீ கொண்டு இப்பீர்கள்.இனி தமிழர் வழைந்து கொடுக்கமாட்டார்கள்.

Post a Comment