Header Ads



யானையில் பயணிப்பாரா மேர்வின்..?

முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் அரசியலில் ஈடுபட தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியில் அங்கம் வகித்த மேர்வின் சில்வா, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியாக பதவி வகித்த காலத்தில் அந்த கட்சியில் இணைந்து கொண்டார்.

சந்திரிக்காவின் அரசாங்கத்தில் அமைச்சராக பதவி வகித்த மேர்வின் சில்வா, மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலும் அங்கம் வகித்தார்.

பசில் ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருடன் மேர்வின் சில்வாவுக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருந்தன.

இதன் காரணமாக மேர்வின் சில்வாவுக்கு கடந்த காலத்தில் அரசியல் ரீதியாக தொல்லை கொடுக்கப்பட்டதுடன் அவரது புதல்வர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் சிறையிலும் அடைக்கப்பட்டார்.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய சுதந்திர முன்னணியில் தேர்தல் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

கடந்த இரண்டு வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபடாது இருந்து வந்த மேர்வின் சில்வா, மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுவரை கம்பஹா மாவட்டத்தில் அரசியலில் ஈடுபட்டு வந்த மேர்வின் தான் பிறந்த மாவட்டமான ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் மீண்டும் தேர்தலில் போட்டியிட இணக்கம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இதுவரை உத்தியோகபூர்வமான இணக்கப்பாடு வெளியிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.