Header Ads



"வடக்கிற்கு மாத்திரம் சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக செயற்படுகிறார்"

சபாநாயகர் ஐக்கிய தேசியக்கட்சிக்கு சார்பாக மாத்திரம் கடமைகளை செய்வதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று காலை ஏற்பட்ட அமளி காரணமாக நாடாளுமன்றத்தை எதிர்வரும் 4 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க சபாநாயகர் கரு ஜயசூரிய எடுத்த தீர்மானம் குறித்து கருத்து வெளியிடும் போதே வெல்கம இதனை குறிப்பிட்டுள்ளார்.

பெட்ரோலிய விநியோகம் அத்தியாவசியமான சேவையாக அறிவிக்கும் வர்த்தமானி அறிவித்தல் சம்பந்தமான வாக்கெடுப்பு நடைபெற்ற போது இந்த அமளி ஏற்பட்டது. எனினும் இதனை காணாதவர் போல் எதிர்க்கட்சித் தலைவர் உறங்கிக் கொண்டிருந்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் வடக்கிற்கு மாத்திரம் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டு வருகிறார்.

மேலும் நாடாளுமன்றத்தில் எது எதிர்க்கட்சி எது ஆளும் கட்சி என்பதை தேடிக்கண்டுபிடிப்பதும் கஷ்டமானது.

எதிர்க்கட்சியின் பணிகள் இருக்குமாயின் அதனை கூட்டு எதிர்க்கட்சியே செய்து வருகிறது.

எதிர்காலத்தில் கூட்டு எதிர்க்கட்சியின் வளர்ச்சியை காணமுடியும் எனவும் குமார வெல்கம குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. செரிதான் எதிர்கட்சி தலைவர் வடக்குக்கு மட்டுமே

    ReplyDelete
  2. அப்போ, வடக்கின் ஆழும் கட்சியின் தலைவர் யார்?

    ReplyDelete

Powered by Blogger.