Header Ads



நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள், குழப்ப வேண்டாம் - தமிழ் அரசியல்வாதிகளுக்கு சுஜீவ பதிலடி

அரசியல் லாபங்களை ஒதுக்கி விட்டு மக்களுக்காக மட்டும் பேசுங்கள் என இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் இன்றைய தினம் -06- நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறினார். மேலும் அங்கு தொடர்ந்த அவர்,

பொருத்து வீட்டுத் திட்டங்கள் குறித்து விவாதிப்பவர்கள் சற்று சிந்தித்து விட்டு பேச வேண்டும்.

தெற்கிலும் வீட்டுத்திட்டங்கள் தொடர்பிலான பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவ்வாறான நிலையிலும் கூட வடக்கு கிழக்கிற்கு வீட்டுத்திட்டங்கள் எமது அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக அரசின் திட்டங்களை குறை கூற வேண்டாம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகள் கிடைக்க வேண்டியது அவசியம்.

வீடுகள் தொடர்பில் மக்கள் மூலம் எமக்கு 65,000 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதன் மூலம் மக்களுக்கு வீடுகள் அவசியம், அவர்கள் அதனை விரும்புகின்றார்கள் என்பது தெளிவாகின்றது.

தற்போது பொய்யாக பொருத்து வீடுகள் வேண்டாம் என்று கூறிக்கொண்டு இருக்கின்றீர்கள். பொருத்து வீட்டுத்திட்டம் தொடர்பில் விமர்சிப்பவர்கள் மக்களுக்கு வேண்டாம் அவை அவசியம் இல்லை என்று கூறுங்கள்.

அப்படி செய்தால் 65,000 விண்ணப்பங்களையும் நிராகரித்து விடுகின்றோம். சுவாமிநாதனிடம் இந்த திட்டத்தை கைவிடும் படி பரிந்துரைக்கின்றோம்.

ஆரம்பத்தில் 8 லட்சம் ஒரு வீட்டுக்கு கொடுக்க வேண்டும் என்று கேட்டீர்கள் பின்னர், 10 லட்சமும் அதன் பின்னர் 15 லட்சமும் கேட்கின்றீர்கள்.

இவ்வாறு கூறிக்கொண்டு வரும் உங்கள் எவருக்கும் வீடு ஒன்றை அமைப்பதற்கு எவ்வளவு செலவாகும் என்பது தெரியாது ஆனால் அது எனக்கு நன்றாக அது தெரியும்.

எனவே இந்தப்பிரச்சினையில் அரசியல் லாபத்தினைப் பார்க்காமல் மக்களுக்காகச் சேவையாற்ற முன்வாருங்கள் எனவும் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, இவரின் உரை நடுவில் குழப்பும் வகையில் கருத்துகளை முன்வைத்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு “நாகரீகமாக நடந்து கொள்ளுங்கள், அடுத்தவரின் உரையை குழப்ப வேண்டாம்.

உங்களுக்கான நேரத்தில் உங்கள் கருத்துகளை முன்வையுங்கள் எனவும் சுஜீவ சேனசிங்க ஆவேசமாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.