Header Ads



கூட்டு எதிரணியினரின் பேயாட்டம், பாராளுமன்றத்திலிருந்து தப்பியோடிய மாணவிகள்

வாக்கெடுப்பின் போது தோல்வியடையப் போவதை முன்கூட்டியே அறிந்துக்கொண்ட காரணத்தினாலேயே கூட்டு எதிரணியினர் பாராளுமன்றத்தை குழப்பினார்கள். எனவே அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தம் எதிர்தரப்புக்களின் திருத்தங்கள் எவையும் இல்லாமலேயே கைசாத்திடப்படும் என சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

மகளிர் பாடசாலை மாணவிகள் சிலரும் கூட பாராளுமன்ற அமர்வினை பார்வையிட வந்திருந்த நிலையில் கூட்டு எதிரணியினரின் பேயாட்டத்தை கண்டு அஞ்சி ஓடினார்கள். பாடசாலை மாணவியர் மக்கள் பிரதிநிதிகளை பார்த்து அஞ்சி ஓடுவதென்பது பாரதூரமான நிலைப்பாட்டினை வெளிப்படுத்துகின்றது.

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கூட்டு எதிரணியினர் போலியான பிரச்சாரங்களை முன்னெடுக்கின்றார்கள். கொல்லன்னாவை பிரச்சினை பற்றி பேச்சுக்களை ஆரம்பித்து வழமை போல பாராளுமன்றத்தை குழுப்புவதே கூட்டு எதிரணியின் முயற்சியாக அமைந்திருந்தது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

2 comments:

  1. பெற்றோர்களுக்கு எச்சரிக்கை விட வேண்டும் பாராளுமன்றத்தை தமது பிள்ளைகள் சுற்றுப்பிரயாணம் என்ற போர்வையில் அங்கு செல்ல வேண்டாம் சில அடிதடிகளில் சிக்குண்டாள் மண்டை உடையும் வாய்ப்பும் உள்ளது ஆகவே யாரும் அங்கு பார்வையாளர்களாக போக வேண்டாம்.எச்சரிக்கை!

    ReplyDelete
  2. ஏற்கனவே அங்கு மது மாதுகளுடன் களியாட்டங்கள் நடந்த போது மிகப் பெறுமதியான மேதிரம் ஒன்று போதையில்,இருந்தபோது லவட்டியதாக செய்திகள் வெளியாகி,இலங்கையின் பாரளுமன்றத்தின் மானம் fb.goole மூலமாக நாரியதை விடவா!!,??,நொல்லாட்ச்ச்ச்சீசீசீ

    ReplyDelete

Powered by Blogger.