Header Ads



ஊட­க­வி­ய­லாளர் மெல் கொலை, கொலையாளிக்கு மரண தண்டனை


ஊட­க­வி­ய­லாளர் மெல் குண­சே­கர கொலை வழக்கில் கொலையாளிக்கு மரண தண்டனை வழங்கி கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிரேஷ்ட பெண் வணிக ஊட­க­வி­ய­லா­ளரும், சண்டே டைம்ஸ், ஏ.எப்.பி. போன்ற ஊட­கங்­களின் முன்னாள் ஊட­க­வி­ய­லா­ள­ரு­மான மெல் குண­சே­கர கொலை வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டுள்ளது. 

ஊட­க­வி­ய­லாளர் மெல் குண­சே­க­ரவை கொலை  செய்­து­விட்டு அவ­ரது கைய­டக்கத் தொலை­பே­சியை கொள்­ளை­யிட்­டமை ஆகிய குற்­றங்கள் தொடர்பில் கைது செய்­யப்­பட்ட ஏ.ஜோர்ஜ் அல்­லது ' பெயின்ட் பாஸ்' என அறி­யப்­படும் பிர­தி­வா­திக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட வழக்கு விசா­ர­ணைகள் நிறை­வுற்­றுள்ள நிலை­யி­லேயே, இன்று அந்த வழக்கின் தீர்ப்­பா­னது மேல் நீதி­மன்ற நீதி­பதி பிய­சேன ரண­சிங்­க­வினால் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஒக்­டோபர் மாதம் 17 ஆம் திகதி முதல் இடம்­பெற்ற நீண்ட விசா­ர­ணைகள் நிறை­வுற்­றுள்ள நிலை­யி­லேயே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடந்த 2014 பெப்­ர­வரி மாதம் 2 ஆம் திகதி தலங்­கம பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பத்­த­ர­முல்ல பகு­தியில் வீட்டில் தனி­மையில் இருந்த மெல் குண­சே­கர சமை­ய­ல­றையில் இருந்த கத்­தியால் குத்தி கொலை  செய்­யப்­பட்­டி­ருந்தார். அத்­துடன் மெல் குண­சே­க­ரவின் பிளக்­பெரி ரக தொலை­பே­சியும் 1200 ரூபா பணமும் வீட்டில் இருந்து கொள்­ளை­யி­டப்­பட்­டி­ருந்­தது.

இது தொடர்பில் விசா­ரணை செய்த மிரி­ஹான பொலிஸார் சி.சி.ரி.வி., கொள்­ளை­யி­டப்­பட்ட பிளக்­பெரி தொலை­பேசி ஆகி­ய­வற்றை மையப்­ப­டுத்தி சந்­தேக நபரைக் கைது செய்­த­துடன் அந்த பிளக்­பெரி தொலை­பே­சி­யையும் கொள்­ளை­யி­டப்­பட்ட பணத்தில் 720 ரூபா மிகு­தி­யையும் மீட்­டனர்.

இந் நிலையில் மெல் குண­சே­க­ரவின் வீட்­டுக்கு வர்ணம் பூச வந்­த­வரே இந்த கொலையை செய்­துள்­ள­மையும் திரு­டு­வ­தற்­காக வீட்­டுக்குள் புகுந்த போது மெல் குண­சே­கர அங்கு இருந்­ததை அவ­தா­னித்து இந்த கொலையை அவர் செய்திருந்தமையும் விசாரணைகளில் உறுதியானது.

குறித்த சந்தேக நபரை பிரதிவாதியாக குறிப்பிட்டு மேல் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பே இன்று -05- வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.