July 18, 2017

'உலக நாடு­களில் இலங்­கையில் மாத்­தி­ரமே இப்­ப­டிப்­பட்ட அமைச்­சர்கள் உள்­ளனர்' - மைத்திரி விசனம்

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் அதி­கா­ரத்தில் உள்ள ஆணை­யா­ளர்கள் இன்னும் ஆறு மாதத்­திற்கு  உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான அதி­கார பொறுப்பை ஏற்­க­வேண்டும். ஏனெனில் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் ஜன­வரி அல்­லது பெப்­ர­வரி மாதங்­களில் நடத்­தப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்தார்.

குப்பையினை வைத்து பெரும் மோச­டிகள் நடக்­கின்­றன. குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­பல்­களும்  பெரும் தடை­யாக உள்­ளன. எவ்­வா­றா­யினும் அனைத்து தடை­க­ளையும் உடைத்­தெ­றிந்து குப்பை பிரச்­சினையை தீர்ப்பேன். அடுத்த அர­சாங்­கத்­திற்கு குப்பை பிரச்­சி­னையை வைத்து விட்டு செல்ல மாட்டேன் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

குப்பை முகா­மைத்­துவம் மற்றும் டெங்கு நோய் தொடர்­பாக நாடு­பூ­ரா­கவும் உள்ள 335 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் ஆணை­யா­ளர்­க­ளுக்­கான விசேட செய­ல­மர்வு கொழும்­பி­லுள்ள இலங்கை மன்ற கேட்போர் கூடத்தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே ஜனாதிபதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அங்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மேலும் உரை­யாற்­று­கையில்,

குப்பை சம்­பந்­த­மாக பல்­வேறு பிரச்­சி­னைகள் ஏற்­பட்­டுள்­ளன. குப்பை மேட்­டினால் மீதொட்­ட­முல்­லையில் பேனர்த்தம் ஏற்­பட்டு பல அப்­பாவி பொது மக்கள் உயி­ரி­ழந்­தனர். நான் ஒன்றை கூற விரும்­பு­கின்றேன். குப்பை முகா­மைத்­துவம் தொடர்பில் இதற்கு முன்பு இருந்த அர­சாங்­கங்­க­ளுக்கு ஒரு தேசிய கொள்கை இருக்­க­வில்லை. 

இதன்­கா­ர­ண­மா­கவே குப்பை விவ­காரம் இவ்­வ­ளவு தூரத்­திற்கு வந்­துள்­ளது. குப்பை முகா­மைத்­துவம் செய்­வ­தற்கு பதி­லாக குப்­பையை குவித்து மேடாக்­கினர். அந்த குப்பை மேடு கீழே விழுந்து உயி­ரி­ழப்­பு­களும் ஏற்­பட்­டன. அந்த குப்பை மேடு அர­சாங்­கத்­திற்கு  ‍மேலேயும் விழுந்­தது. அதா­வது அர­சாங்­கத்தின் மீதே விமர்­ச­னங்கள் எழுந்­துள்­ளன. நாட்டில் சில உள்­ளூ­ராட்சி நிறு­வ­னங்­களில் குப்பை முகா­மைத்­து­வத்­திற்கு கொள்கை காணப்­ப­டு­கின்­றது. குறிப்­பாக பலாங்­கொடை பிர­தேச சபை உட்பட சில உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் குப்பை  முகா­மைத்­துவம் தொடர்பில் கொள்கை உள்­ளன. எனினும் அனைத்து உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளிலும் இவ்­வா­றான கொள்கை இல்லை. 

குப்­பையை வைத்து பண­மீட்ட கூடி­ய­வர்­க­ளி­னால்தான் இந்த பிரச்­சினை ஏற்­பட்­டது.குப்­பையை வைத்து மோசடி செய்ய கூடிய கும்பல் இருந்­தது. மேலும் பாதாள உலக கோஷ்­டி­யி­னரும் தலை­யீடு செய்­துள்­ளனர். குப்பை கொட்­டு­வ­தற்கு பாதாள உலக கோஷ்­டி­களும் மோசடி கும்­ப­ல்களுமே பெரும் தடை­யாக உள்­ளன. அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்கள் சிலர் கூட தமது பிர­தே­சங்­களில் குப்பை குவிப்­ப­தற்கு எதிர்ப்பு வெளி­யிட்டு போராட்­டங்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். உலக நாடு­களில் இலங்­கையில் மாத்­தி­ரமே இப்­ப­டிப்­பட்ட அமைச்­சர்கள் உள்­ளனர். 

1 கருத்துரைகள்:

இதற்கு முழுக் காரணம் யாருப்ப! மக்கள் விரட்டியவர்களை,யாரு அமைச்சுப் பதவி,கொடுத்தது,,அந்த நல்ல்வன்ன்!! ??? யாரு வினை விதைத்வன் வினை அறுப்பான் என்று தமிழ் பழ மொழி ஒன்று இருக்குது,தொரியுமோனண்ணோணோங்ங்ணா..!!!??

Post a Comment