Header Ads



ஹஜ் விவகார வழக்கு, செப்டெம்பருக்கு ஒத்திவைப்பு

-ARA.Fareel-

ஹஜ் விவ­காரம் தொடர்பில் மூன்று ஹஜ் முக­வர்­களால் அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவ­கா­ரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர் மற்றும் அரச ஹஜ் குழு­வினர் என்­ப­வர்­க­ளுக்கு எதி­ராக தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கின் விசா­ர­ணையை உயர் நீதி­மன்றம் நேற்று முன்­தினம் எதிர்­வரும் செப்­டெம்பர் 15 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைத்­தது. 

ஹஜ் ஏற்­பா­டு­களில் உயர்­நீ­தி­மன்றம் 2013 ஆம் ஆண்டு வழங்­கிய ஹஜ் வழி­மு­றைகள் (Guide Lines) மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் கோட்டா பகிர்­வுகள் புதிய முறை­யி­லன்றி உயர்­நீ­தி­மன்றம் வழங்­கி­யுள்ள ஹஜ் வழி­மு­றை­க­ளின்­படி பழைய முறை­யிலே தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஹஜ் முக­வர்­க­ளி­டையே பகி­ரப்­ப­ட­வேண்­டு­மென உத்­த­ர­விடும் படியும் மூன்று ஹஜ்­மு­க­வர்­க­ளினால் இவ்­வ­ழக்கு தொட­ரப்­பட்­டி­ருந்­தது. 

கரீம் லங்கா, அம்ஜா டிரவல்ஸ், இக்ராஃ டிரவல்ஸ் ஆகிய மூன்று ஹஜ் முகவர் நிலை­யங்­க­ளினால் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த இவ்­வ­ழக்கின் பிர­தி­வா­தி­க­ளாக முஸ்லிம் விவ­கா­ரங்கள் அமைச்சர், முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­கள பணிப்­பாளர், அரச ஹஜ் குழு உறுப்­பி­னர்கள் என்போர் பெயர் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தனர். 

நேற்று முன்­தினம் உயர்­நீ­தி­மன்றில் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த இவ்­வ­ழக்கு அன்­றைய தினம் உயர் நீதி­மன்றில் சைட்டம் பல்­க­லைக்­க­ழக விவ­காரம் தொடர்­பான வழக்கு விசா­ரிக்­கப்­பட்­டதால் நேர­மின்மை கார­ண­மாக எதிர்­வரும் செப்­டெம்பர் 15 ஆம் திக­திக்கு ஒத்தி வைக்­கப்­பட்­டது. 

வாதிகள் தரப்பில் மன்றில் சட்­டத்­த­ர­ணிகள் மனோ­கர டி சில்வா, அனோஜ பிரேமரத்ன ஆகிய ஜனாதிபதி சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர். பிரதிவாதிகள் தரப்பில் சட்டமா அதிபர், சட்டத்தரணி சஞ்சீவ உட்பட்ட குழுவினர் ஆஜராகியிருந்தனர்.

No comments

Powered by Blogger.