Header Ads



'தீவிரவாத தேசியக் குழு' என சாடி, பிரித்தானியா வெளியிட்ட அறிக்கை

பிரித்தானியாவின் சர்வதேச மற்றும் பொதுநலவாய அலுவலகம், மனித உரிமைகள் தொடர்பான தனது 2016ம் ஆண்டிற்கான அறிக்கையை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. 

அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, 

இலங்கையில் மனித உரிமைகள் நிலைமையானது 2016 இல் சில முன்னேற்றங்களைக் கண்டுள்ள போதிலும், அரசாங்கம் அதிகம் செய்ய வேண்டியுள்ளது. 

அத்துடன் காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (OMP) ஒன்றை நிறுவும் சட்டவாக்கம் நிறைவேற்றப்படுவதை ஐக்கிய இராச்சியம் வரவேற்றுள்ளதுடன், மீளிணக்கத்தை நோக்கிய ஒரு முக்கிய படிநிலையாக இது இருப்பதாகவும், எவ்வாறாயினும், அது நடவடிக்கைக்கு வர இன்னும் செய்ய வேண்டியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

2016 இல் மேலும் காணி விடுவிப்புக்களை அரசாங்கம் அறிவித்துள்ளது என்றும் வடக்கில் இராணுவம் ஒரு கணிசமான பிரசன்னத்தைப் பேணும் அதேவேளையில் அது எடுத்திருக்கும் குறைவான தோற்றத்தன்மை பொதுவாக வரவேற்கப்படுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காணி விடுவிப்பை துரிதப்படுத்துமாறும், வடக்கில் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளுமாறும் ஐக்கிய இராச்சியம் தொடர்ந்தும் அழைப்பு விடுத்து வந்துள்ளதுடன், தற்போதுள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழுள்ள சில கைதிகள் குற்றச்சாட்டுகள் இல்லாமல் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு படைகளினால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், தொந்தரவுகள் வடக்கு கிழக்கில் தொடருவதாக அறிக்கைகள் உள்ளன. எவ்வாறாயினும் இது முன்னைய அரசாங்கத்தில் உள்ளதைக் காட்டிலும் மிகவும் குறைந்தமட்டத்திலேயே உள்ளது. 

இனங்களுக்கிடையிலான ஒரு பதற்றம் அக்கறைக்குரிய விடயமாக தொடர்ந்தும் உள்ளதுடன், தீவிரவாத தேசியக் குழுக்களின் உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வெறுப்புப் பேச்சு, பதற்றங்களைத் தூண்டிவிட்டுள்ளதாக பிரித்தானியாவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

மனித உரிமைகள் தொடர்பாக மேலும் விரைவான முன்னேற்றத்தைச் செய்வதற்கு இலங்கைக்கு ஆதரவளித்து தூண்டுதல் செய்வதை ஐக்கிய இராச்சியம் 2017 இலும் தொடரும் என்றும், பொறுப்புக்கூறல், மீளிணக்கம், மனித உரிமைகளை முன்னேற்றுவதற்கு இலங்கை அரசாங்கம் செய்த அர்ப்பணிப்புக்களை செய்து முடிப்பதற்கு ஆதரவளிப்பதில் இலங்கை அரசாங்கத்துடனும், சர்வதேச பங்காண்மையாளர்களுடனும், சிவில் சமூகத்துடனும் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம் என்று பிரித்தானியாவின் சர்வதேச மற்றும் பொதுநலவாய அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.