Header Ads



'சகோதரர்களிடையே எதிரிகள், தீமூட்டி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்'


வளைகுடாவில் நீடிக்கும் இராஜதந்திர முறுகலை தணிக்கும் முயற்சியாக துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையிப் எர்துவான் பிராந்தியத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

நான்கு அரபு நாடுகள் கட்டார் மீது கட்டுப்பாடுகளை விதித்த நிலையில் துருக்கி கட்டாருக்கு உதவிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஜித்தா புறப்பட்ட எர்துவான் அங்கு சவூதி மன்னர் சல்மானை சந்தித்தார்.

இதன்போது “பயங்கரவாதம் மற்றும் அதற்கான நிதிக்கு எதிராக துருக்கியின் போரை” மன்னர் சல்மான் பாராட்டியதாக சவூதியின் அரச செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இதனைத் தொடர்ந்து ஞாயிறு பின்னேரம் வளைகுடா பதற்றத்தில் மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டிருக்கும் குவைட்டுக்கு விஜயம் செய்த எர்துவான், நேற்று திங்கட்கிழமை கட்டாரை சென்றடைந்தார்.

பிராந்திய விஜயத்திற்கு முன்னர் இஸ்தான்பூலில் கருத்து வெளியிட்ட எர்துவான், “இந்த பிரச்சினையை நீடிப்பதில் எவருக்கு விருப்பம் இல்லை” என்றார்.

பிராந்தியத்தில் சகோதரர்களுக்கு இடையில் எதிரிகள் தீமூட்டி பதற்றத்தை ஏற்படுத்தி இருப்பதாக அவர் குற்றம்சாட்டினார்.

பயங்கரவாதத்திற்கு ஆதரவளிப்பதாக குற்றம் சாட்டில் சவூதி, பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் எகிப்து நாடுகள் கடந்த ஜுன் 5 ஆம் திகதி கட்டாருடனான இராஜதந்திர உறவுகளை துண்டித்தது. 

1 comment:

  1. May Allh bless Turkey president for his good work

    ReplyDelete

Powered by Blogger.