Header Ads



இலங்­கையர்கள் கட்டார், சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள்

எந்த அள­வி­லான அழுத்­தங்கள் பிர­யோ­கிக்­கப்­பட்­டாலும் அவற்றுக்கு முகம்­கொடுக்கும் சக்­தி­மிக்க ராஜ்­ஜி­ய­மாக கட்டார் அமைந்­துள்­ளது.   எனவே அங்கு பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளுக்கு எந்­த­வித பாதிப்­புக்­களும் இல்லையென வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பிரதி அமைச்சர் மனுஷ நாண­யக்­கார தெரி­வித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற அக்­கட்­சியின் இளைஞர் அணி ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றுகை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் தெரி­விக்­கையில்,

கட்டார் நாடு எந்த அள­வி­லான அழுத்­தங்கள் ஏற்­பட்­டாலும் அவற்­றுக்கு முகம்­கொ­டுக்கும் சக்­தி­மிக்க நாடாக இருக்­கின்­றது. எனவே, அங்கு பணி­யாற்றும் இலங்­கை­யர்­க­ளுக்கு எந்­த­வித பிரச்­சி­னை­களும் ஏற்­ப­டாது.

தற்­போதும் அந்த நாட்­டிற்­கான பணி­யா­ளர்கள் இலங்­கை­யி­லி­ருந்து சென்­ற­வண்­ணமே இருக்­கின்­றார்கள். எனவே அச்­சு­றுத்­தலான நிலைப்­பா­டொன்று அந்­நாட்டில் தற்­போ­தை­க்கு இல்லை. 

அந்த நாட்­டிற்கு மேற்­கொள்­ளப்­படும் விமான சேவை­க­ளிலும் தற்­போதும் எந்­த­வித பாதிப்­புக்­களும் ஏற்படவில்லை. வழமை போலவே அந்தச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன. எனவே இலங்கை பணியாளர்கள் குறித்தும் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்றார்.

No comments

Powered by Blogger.