Header Ads



பல்கலைக்கழக மாணவருக்காக, நான் கவலைபடுகின்றேன் - அமைச்சர் எஸ்.பி.

பல்கலைக்கழகங்களில் மாற்றுக் கொள்கைகளுக்கு இடமில்லாத நிலைமை உருவாகியுள்ளது என சமூக நலன்புரி அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கண்டி ஹேவாஹெட்ட உடுவௌ மஹா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகங்களுக்குள் பல்வேறு மாற்றுக் கருத்துக்களுக்கு காணப்பட்ட அவகாசத்தை ஜே.வி.பி மற்றும் முன்னிலை சோசலிச கட்சி ஆகியன முடக்கியுள்ளன.

பல்கலைக்கழக மாணவ மாணவியருக்காக நான் கவலைபடுகின்றேன். வீதியில் இறங்கி அங்கு ஓடுகின்றார்கள் இங்கு ஓடுகின்றார்கள். இவர்களை முன்னிலை சோசலிச கட்சியே வழிநடத்துகின்றது.

முன்னர் எங்களது பல்கலைக்கழக காலங்களில் பல்வேறு கருத்துக்களை உடையவர்களும் பல்கலைக்கழகங்களில் அங்கம் வகித்தனர். அதற்கான சுதந்திரத்தை ஜே.வி.பி கட்சி இல்லாமல் செய்துள்ளது.

மாற்று அரசியல் கொள்கைகளை உடைய எந்தவொரு பல்கலைக்கழக மாணவரின் குரலுக்கும் இடமளிக்கப்படுவதில்லை.

இலங்கையின் முதல் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவராக நான் செயற்பட்டிருக்கின்றேன்.

எங்களது காலத்தில் சோசலிசம், மார்க்சிசம்,புரட்சிவாதம் என பல்வேறு கொள்கைகளை உடைய 15 குழுக்கள் காணப்பட்டன.

சோசலிச கொள்கைகளை பின்பற்றிய பலம்பொருந்திய நாடுகள் பலவும் இன்று தனது பொருளாதார கொள்கைகளில் மாற்றம் கொண்டு வந்துள்ளதாக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.